அத்தனை சதம் அடிச்சு என்ன பயன்? இந்திய அணியில் அந்த மாற்றத்தை செய்வேன்.. டிகே’விடம் ரோஹித் சர்மா ஆதங்கம்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டனாக விராட் கோலிக்கு பின் ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையிலும் வழக்கம் போல இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை தெறிக்க விட்டு தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று வரும் இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்தித்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

அதை தொடர்ந்து 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் வரலாறு காணாத அளவுக்கு தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து எதிரணிகளை சொல்லி அடித்தது. அதனால் 2011 போல கோப்பையை வென்ற சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மீண்டும் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை கோட்டை விட்டது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

- Advertisement -

என்ன பயன்:
இருப்பினும் அந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்ததும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 765 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்து தொடர்நாயகன் விருது வென்றது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இந்நிலையில் உலகக் கோப்பையை வெல்லமால் இது போல சதங்கள் அடித்து சாதனை படைப்பதில் ஒரு பயனுமில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

குறிப்பாக 2019 உலகக் கோப்பையில் தாம் தனி ஒருவனாக 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்தும் கடைசியில் கோப்பையை கோப்பையை வெல்ல முடியவில்லையே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ரோஹித் சர்மா இது பற்றி தினேஷ் கார்த்திக்கிடம் நிகழ்த்திய உரையாடல் பின்வருமாறு. “அணியில் நான் சில மாற்றங்களை கொண்டு வர விரும்புகிறேன். குறிப்பாக வீரர்கள் களத்திற்கு சென்று சுதந்திரமாக விளையாட வேண்டும்”

- Advertisement -

“சாதனைகளுக்காக விளையாடும் கிரிக்கெட்டை அணியிலிருந்து மொத்தமாக வெளியே எடுக்க விரும்புகிறேன். ஏனெனில் மக்கள் யாரும் புள்ளிவிவரங்களை பார்க்க மாட்டார்கள். ரசிகர்கள் யாரும் தனிநபர் ஸ்கோர்களை பார்க்க மாட்டார்கள். என்னை பொறுத்த வரை நம்பர்கள் ஓவர்ரேட்டட். இருப்பினும் இந்தியாவில் நாம் சாதனைகளைப் பற்றி அதிகமாக பேசுகிறோம்”

இதையும் படிங்க: பஸ்பால்ன்னு பெயர் மட்டும் போதாது.. இந்திய அணியை பாராட்டிய ஏபிடி.. இங்கிலாந்தை மறைமுக கிண்டல்

“2019 உலகக் கோப்பையில் நான் 5 சதங்கள் அடித்தேன். ஆனால் கடைசியில் என்ன நடந்தது? நாங்கள் தோற்றோம்” என்று கூறினார். மேலும் விராட் கோலிக்கு பின் இந்திய அணியை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக வழி நடத்துவது மிகப்பெரிய கௌரவமாக கருதுவதாகவும் ரோகித் சர்மா கூறினார். இதை தொடர்ந்து அவருடைய தலைமையில் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement