பஸ்பால்ன்னு பெயர் மட்டும் போதாது.. இந்திய அணியை பாராட்டிய ஏபிடி.. இங்கிலாந்தை மறைமுக கிண்டல்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 119/1 ரன்கள் குவித்து இன்னும் 127 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களில் அவுட்டானாலும் எதிர்ப்புறம் இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கும் ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி 3 சிக்சருடன் அரை சதமடித்து 76* (70) ரன்கள் குவித்து அசத்தி வருகிறார்.

- Advertisement -

பாராட்டிய ஏபிடி:
முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் தாங்கள் இத்தொடரில் இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிப்போம் என்று இங்கிலாந்து அணியினர் ஆரம்பத்திலேயே சவால் விடுத்தனர். குறிப்பாக 2022ஆம் ஆண்டு பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தியதைப் போல இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று மார்க் வுட் போன்ற இங்கிலாந்து வீரர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆனால் தார் ரோட் போலிருந்த பாகிஸ்தான் மைதானங்களில் அடித்து நொறுக்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சவாலான இந்திய மைதானங்களில் தரமான பந்து வீச்சில் முதல் நாளிலேயே ஆல் அவுட்டாகும் அளவுக்கு சுமாராக விளையாடினார்கள். மறுபுறம் அதே பிட்ச்சில் இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கிய ஜெய்ஸ்வால் இந்தியாவை 6.3 ஓவரில் 50 ரன்கள் தாண்ட வைத்து 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி வருகிறார்.

- Advertisement -

அதனால் நீங்கள் விளையாட நினைத்த பஸ்பால் ஆட்டத்தை இந்தியா விளையாடுவதாக இங்கிலாந்தை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து போல பெயருக்காக சூழ்நிலை அறியாமல் விளையாடுவதை விட இந்தியா போல சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் அதிரடியாக விளையாடுவதே உண்மையான பஸ்பால் என்று ஏபி டீ வில்லியர்ஸ் இந்தியாவை பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “இந்தியா தங்களுடைய இன்னிங்ஸின் துவக்கத்தில் இங்கே ஓவருக்கு 8 – 9 ரன்ரேட்டில் விளையாடுகிறது. நீங்கள் இதை தைரியம் அல்லது பஸ்பால் என்று அழைக்க தேவையில்லை”

இதையும் படிங்க: பாகிஸ்தானில் மாஸ் காட்டிய பஸ்பால்.. இந்தியாவில் முதல் நாளிலேயே படுத்த பரிதாப புள்ளிவிவரம்

“இது சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடுவதை பொறுத்ததாகும். இவை அனைத்தும் போட்டியில் முன்னிலை பெறுவதற்கான தருணங்களை கண்டறிவதை பொறுத்ததாகும். அது போன்ற தருணங்கள் மாறும் போது அதற்கு நீங்கள் உட்பட்டு உள்வாங்கி மீண்டும் அந்த தருணம் வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் அந்த பல்வேறு தருணங்களை நீங்கள் மதிக்காமல் போனால் அது போட்டியை மாற்றி விடும். இறுதியில் நீங்கள் எந்த வகையான பாலை விளையாடினாலும் அது உங்களை கடித்து விடும்” என்று கூறியுள்ளார்.

Advertisement