அந்த 2 பேர்ல ஒருத்தர் வந்தாலும் சர்பராஸ் கானின் இடம் காலியாவது கன்பார்ம் – வெளியான தகவல்

Sarfaraz
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான சர்பராஸ் கானுக்கு நீண்ட நாட்களாக டெஸ்ட் அணியில் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்த வேளையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்போதும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வரும் அவருக்கு ஒரு வாய்ப்பாவது அளிக்கப்பட வேண்டும் என்ற குரல்களும் எழுந்து வந்தன.

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் சர்பராஸ் கானும் சற்று விரக்தி அடைந்தார்.

- Advertisement -

ஆனால் இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியதால் அந்த வெற்றிடத்திற்காக மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அப்படி அந்த இடத்தில் ஒருவராக நிரப்பப்பட்டவர் தான் சர்பராஸ் கான் ஆனாலும் அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக அறிமுக வீரராக ரஜத் பட்டிதார் இந்திய அணியில் விளையாடி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் வேளையில் அவரது இடம் பறிபோகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கே.எல் ராகுல் அல்லது விராட் கோலி ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இணைந்தால் கூட சர்பராஸ் கான் வெளியேற்றப்படுவது உறுதி.

இதையும் படிங்க : உலகிலேயே கம்ப்ளீட் பவுலரான அவர்.. இந்திய அணி 2024 டி20 உ.கோ ஜெயிக்க தேவை.. பிளாண்டர் பாராட்டு

ஒருவேளை இந்திய அணியின் நிர்வாகம் அவருக்கு இதுபோன்ற சர்வதேச கிரிக்கெட் அனுபவம் தேவை என்று நினைத்தால் அவரை அணியிலிருந்து நீக்காமல் வீரர்களுடனே ஓய்வறையில் வைத்து அவரின் அனுபவத்தை அதிகரிக்க உதவலாம். மற்றபடி இந்த தொடரில் இருந்து சர்பராஸ் கான் வெளியேற்றப்படவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement