உலகிலேயே கம்ப்ளீட் பவுலரான அவர்.. இந்திய அணி 2024 டி20 உ.கோ ஜெயிக்க தேவை.. பிளாண்டர் பாராட்டு

Vernon Philander 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. அதனால் முதல் போட்டியில் சந்தித்த தோல்வியிலிருந்து கம்பேக் கொடுத்த இந்திய அணி தொடரை சமன் செய்துள்ளது. அந்த வெற்றிக்கு மொத்தம் ஒன்பது விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

குறிப்பாக ஓலி போப், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போன்ற தரமான பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை துல்லியமான யார்க்கர் பந்துகளால் அவர் தெறிக்க விட்டது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் அதன் காரணமாக ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் முன்னேறி பும்ரா சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

கம்ப்ளீட் பவுலர்:
அதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வகையான ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பவுலர் என்ற மாபெரும் உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா தான் தற்சமயத்தில் அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய முழுமையான பவுலராக இருப்பதாக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் வெர்னோன் பிளாண்டர் பாராட்டியுள்ளார்.

மேலும் துல்லியமான யார்கர் பந்துகளை வீசி தெறிக்க விடும் பும்ரா 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். அதே போல முகமது ஷமி பற்றியும் அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார். அவர் நிலையான லைன் மற்றும் லென்த்தை பிடித்து தொடர்ச்சியாக பந்து வீசும் திறமையை கொண்டிருப்பதாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இப்படி வெற்றிகரமாக செயல்படுகிறார்”

- Advertisement -

“ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் பந்துகளை மட்டுமே வீச முயற்சித்ததால் ரன்களை வாரி வழங்கிய அவர் தற்போது பாடத்தை கற்றுக் கொண்டு முன்னேறியுள்ளார். புதிய தந்தை ஸ்விங் செய்து ஸ்டம்பை நோக்கி கொண்டு வரும் அவர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுக்கிறார். மாற்றங்களை செய்து தெறிக்க விடக்கூடிய யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக் கோப்பையை வெல்ல உங்களுக்கு தேவை”

“அந்த தொடரில் அவர் வெற்றியில் பெரிய பங்காற்றுவார் என்று நான் கருதுகிறேன். முகமது ஷமி தன்னுடைய சீம் பகுதியை பயன்படுத்தி அழகாக வீசுகிறார். தற்சமயத்தில் பும்ரா ஆதிக்கம் செலுத்தும் விதத்தை இருப்பது நன்றாக இருக்கிறது. ஃபிளாட்டான பிட்ச்களை கொண்ட இந்திய மைதானங்களில் நிறைய விளையாடிய அவர் கடினமான தென்னாப்பிரிக்காவுக்கு வந்த போது சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் தன்னை உட்படுத்திக் கொண்டு அசத்தினார்” என்று கூறினார்.

Advertisement