டைவ் அடித்து அட்டகாசமான கேட்சை பிடித்ததும் பிளையிங் கிஸ்ஸை பறக்கவிட்ட சர்பராஸ் கான் – எதற்கு தெரியுமா?

Sarfaraz-Khan
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய இளம் வீரரான சர்பராஸ் கான் இரண்டு இன்னிங்ஸ்களுமே அரைசதம் அடித்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது ராஞ்சி நகரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 14 ரன்களை மட்டுமே குவித்த சர்பராஸ் கான் பேட்டிங்கில் சற்று சொதப்பி இருந்தாலும் பீல்டிங்கின் போது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

குறிப்பாக இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸின்போது 145 ரன்கள் எடுத்து சுருண்ட வேளையில் இந்த இன்னிங்ஸில் இரண்டு அற்புதமான கேட்ச்களை சர்பராஸ் கான் பிடித்திருந்தார். அதிலும் குறிப்பாக இந்த போட்டியின் 41 ஓவரின் போது குல்தீப் யாதவ் வீசிய பந்தை இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லி தூக்கி அடித்தார்.

அந்த பந்து சர்பராஸ் கான் இருந்த பக்கத்தை நோக்கி சரியாக பறந்தது. இருப்பினும் பந்து சற்று முன்னரே விழுவதை கணித்த சர்ஃபராஸ் கான் முன்புறமாக அற்புதமான டைவ் ஒன்றினை அடித்து அந்த கேட்சை அட்டகாசமாக பூர்த்தி செய்தார்.

- Advertisement -

இப்படி ஒரு அற்புதமான கேட்சை பிடித்த பின்னர் ரசிகர்களை நோக்கி அவர் பிளையிங் கிஸ் ஒன்றையும் பறக்க விட்டார். இப்படி அவர் கேட்ச் பிடித்து மகிழ்ச்சியை கொண்டாட காரணம் யாதெனில் : கடந்த சில ஆண்டுகளாகவே சர்ஃபராஸ் கானின் உடல் பருமன் குறித்த கருத்துக்கள் பலரது மத்தியிலும் பேசப்பட்டு வந்தது.

இதையும் படிங்க : பெர்த், காபாவில் அப்படி நடந்தப்போ எங்க போனீங்க.. பென் ஸ்டோக்ஸை விளாசிய சுனில் கவாஸ்கர்

இவ்வேளையில் எது எப்படி இருந்தாலும் என்னால் களத்தில் சிறப்பாக பீல்டிங் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையாகவே அவர் ரசிகர்களை நோக்கி அதை செய்தார் என்றும் மேலும் தேர்வுக்குழுவினருக்கும் மறைமுகமாக தான் பிட்டாக இருப்பதை எடுத்துக்காட்டவே அவ்வாறு செய்தார் என்றும் தெரிகிறது.

Advertisement