பெர்த், காபாவில் அப்படி நடந்தப்போ எங்க போனீங்க.. பென் ஸ்டோக்ஸை விளாசிய சுனில் கவாஸ்கர்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் நான்காவது போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் துவங்கியது.

ஆனால் அப்போட்டி துவங்குவதற்கு முன்பாகவே மைதானத்தை பற்றி இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக ராஞ்சி பிட்ச் தூரத்தில் இருந்து பார்க்கும் போது பச்சையாகவும் அருகில் சென்று பார்த்தால் வேறு மாதிரியாகவும் தெரிவதாக கூறிய அவர் இப்போட்டியில் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை என தெரிவித்தார்.

- Advertisement -

கவாஸ்கர் பதிலடி:
அதை விட போட்டி துவங்குவதற்கு முன்பாகவே பிட்ச்சில் அதிகப்படியான வெடிப்புகள் இருப்பதாகவும் கூறிய அவர் தங்களை வீழ்த்துவதற்காக இந்தியா வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்சை அமைத்துள்ளதாக மறைமுகமாக விமர்சித்தார். அந்த நிலையில் போட்டி துவங்கிய போது 112/5 என ஆரம்பத்திலேயே இங்கிலாந்து தடுமாறியதால் ராஞ்சி பிட்ச் மிகவும் சுமாராக இருப்பதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்தார்.

ஆனால் ஜோ ரூட் போராடி சதமடித்து 122* ரன்கள் குவித்ததால் ஓரளவு இங்கிலாந்து தப்பியதும் தன்னுடைய பேச்சை மாற்றிய அவர் ராஞ்சி பிட்ச் இனிமேலும் மோசமாக இல்லை என்று பல்டி அடித்து புதிய கருத்தை தெரிவித்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் மற்றும் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா போன்ற மைதானங்களில் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே இயற்கையாக வெடிப்புகள் இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அங்கு விளையாடிய போட்டிகளின் போது அமைதியாக இருந்த இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் இந்தியாவில் மட்டும் இப்படி பேசுவதாக கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் அவர் பேசியது பின்வருமாறு. “பெர்த் மற்றும் பிரிஸ்பேன் மைதானங்களின் பிட்ச் வெடிப்புகளுடன் இருப்பதை நான் பார்த்துள்ளேன். குறிப்பாக பெர்த் பிட்ச்சில் உள்ள வெடிப்பு மீது பந்து பட்டால் அது உங்களுடைய தலைக்கு மேலே பறக்கும்”

இதையும் படிங்க: துருவ் ஜுரேலின் இந்த முதிர்ச்சியான ஆட்டத்திற்கு காரணம்? ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகமா? – என்ன காரணம்?

“இருப்பினும் நீங்கள் அதை எதிர்கொண்டு விளையாட வேண்டும். அங்கே தான் உங்களுடைய தைரியத்தையும் திறமையும் காட்ட வேண்டும். ஆனால் இந்தியாவில் அப்படி நடைபெறும் போது கடவுளே அனைவரும் உடைந்து பேசுகிறார்கள்” என்று கூறினார். முன்னதாக இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் இப்படி முணுமுணுப்பார்கள் என்று தொடர் துவங்குவதற்கு முன்பாகவே கவாஸ்கர் தெரிவித்திருந்தார். அதே போலவே இந்த தொடர் முழுவதும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் இந்தியாவை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement