துருவ் ஜுரேலின் இந்த முதிர்ச்சியான ஆட்டத்திற்கு காரணம்? ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகமா? – என்ன காரணம்?

Dhruv-Jurel
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நான்காவது டெஸ்ட் போட்டியானது தற்போது ராஞ்சி நகரில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 23-ஆம் தேதி துவங்கிய இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளின் முடிவில் இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை குவித்துள்ளது.

மேலும் இன்னும் இந்த டெஸ்ட் போட்டிக்கான இரண்டு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் இந்திய அணியின் வெற்றிக்கு 152 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இந்திய அணியின் கையே இந்த டெஸ்ட் போட்டியில் ஓங்கியுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 353 ரன்களை குவிக்க இரண்டாவதாக விளையாடிய இந்திய அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

இருப்பினும் அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேல் பின்வரிசை வீரர்களுடன் சேர்ந்து அமைத்த பார்ட்னர்ஷிப் மிகச் சிறப்பான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்திய அணிக்காக தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வரும் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வகையில் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை அவர் 307 ரன்கள் வரை கொண்டு சேர்த்துள்ளார். அந்த வகையில் இந்த போட்டியில் 149 பந்துகளை சந்தித்தவர் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 90 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவரது இந்த செயல்பாடு காரணமாகவே தற்போது இந்திய அணி நல்ல நிலையில் உள்ளதால் அவரது இன்னிங்சை பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் அவரது இந்த சிறப்பான இன்னிங்சிற்கு ஒரு முக்கியமான காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே ஜெய்ஸ்வாலை அவர்களது பயிற்சி முகாமில் சேர்த்து வலுப்படுத்தியது. அதனை தொடர்ந்துதற்போது அதே கிரிக்கெட் அகாடமியில் தொடர்ந்து 18 மாத காலங்கள் துருவ் ஜுரேலும் பயிற்சி பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : அடுத்ததாக 100 ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருப்பீர்களா? – கவாஸ்கரின் கேள்விக்கு பதிலளித்த அஷ்வின்

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அகாடமியில் ஒவ்வொரு நாளும் 140 ஓவர்களை எதிர்கொண்ட அவர் மிகச் சிறப்பாக சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை பெற்றுள்ளார். மேலும் நாள்தோறும் நான்கு மணி நேரம் பிரத்தியேகமாக வெவ்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். விக்கெட் கீப்பிங், பேட்டிங் என அனைத்து வகையிலும் முன்னேற அவர்களது இந்த பயிற்சி முகாமே காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement