அடுத்ததாக 100 ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருப்பீர்களா? – கவாஸ்கரின் கேள்விக்கு பதிலளித்த அஷ்வின்

Gavaskar-and-Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான அஸ்வின் கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாக இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளிலும், 116 ஒருநாள் போட்டிகளிலும், 65 டி20 போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரில் கடந்த 2009-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 197 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது ராஞ்சி நகரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் தனது 99-ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். அந்த வகையில் இந்த டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸின் போது இங்கிலாந்து அணியை 145 ரன்கள் சுருட்ட முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் மொத்தமாக 15.5 ஓவர்கள் வீசிய அஷ்வின் 51 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் சரிவு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக தற்போது இந்திய அணியானது 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்கினை நோக்கி தற்போது பலமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த போட்டியானது அஸ்வினின் 99-ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்து தர்மசாலாவில் நடைபெற இருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதிப்போட்டி அவருக்கு நூறாவது டெஸ்ட் போட்டியாக அமைய இருக்கும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அஸ்வினிடம் எடுத்த பேட்டி ஒன்றில் :

- Advertisement -

அடுத்ததாக தர்மசாலா மைதானத்திற்கு நீங்கள் செல்லுவீர்கள். அது உங்களுக்கு நூறாவது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட்க்காக நீங்கள் செய்துள்ள பெரிய செயல்களுக்காக மரியாதை செலுத்தும் வகையில் ரோகித் சர்மா உங்களை களத்தில் கேப்டனாக செயல்பட அனுமதிப்பார் அதுகுறித்து நீங்கள் என்ன நினைக்குறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க : இன்னும் 22 ரன்கள் அடிச்சா போதும்.. விராட் கோலியின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் – யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

அதற்கு பதிலளித்த அஷ்வின் கூறுகையில் : கவாஸ்கர் பாய் நீங்கள் பெருந்தன்மையாக கூறுகிறீர்கள். ஆனால் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. இது மாதிரி நான் பல விடயங்களை கடந்து விட்டேன். இந்திய அணியுடன் இருக்கும் ஒவ்வொரு தருணமும் நான் அனுபவித்து தான் இருக்கிறேன். அது எவ்வளவு காலம் நீடிக்கிறதோ அவ்வளவு காலமும் நான் மகிழ்ச்சியாகவே இருப்பேன் என்று அஸ்வின் பதிலளித்து குறிப்பிடத்தக்கது.

Advertisement