ஃபீனிக்ஸ் பறவையை போல போராடி இந்திய அணி வாய்ப்பை பெற்ற சர்பராஸ் கான்.. நன்றி சொன்ன தந்தை

Sarfaraz Khan 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களின் சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்த சூழ்நிலையில் இத்தொடரின் 2வது போட்டியிலிருந்து கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தால் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் அவர்கள் வெளியேறியுள்ளதால் சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சௌரப் குமார் ஆகிய 3 இளம் வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அதில் மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் சர்ப்ராஸ் கான் ஒரு வழியாக இந்தியாவுக்காக விளையாட முதல் முறையாக தேர்வாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் 45 போட்டியில் விளையாடியுள்ள அவர் 3912 ரன்களை 69.85 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ளார்.

- Advertisement -

தந்தையின் நன்றி:
குறிப்பாக ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் ப்ராட்மேனை மிஞ்சி உள்ளூர் கிரிக்கெட்டில் 80க்கும் மேற்பட்ட சராசரியை கொண்டிருந்த அவர் ரன்கள் மேல் ரன்கள் குவித்து இந்தியாவுக்காக விளையாட போராடினார். ஆனாலும் இடம் கிடைக்காததால் கடந்த வருடம் ஒரு போட்டியில் சதமடித்த பின் “இந்தியாவுக்கு விளையாட இன்னும் என்ன தான் செய்ய வேண்டும்” என்ற வகையில் அழுகாத குறையாக அவர் ரியாக்சன் கொடுத்தது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

ஆனால் புஜாரா, ரகானே போன்ற மூத்த வீரர்கள் இருந்ததால் அவரை தொடர்ந்து பிசிசிஐ புறக்கணித்து வந்தது. அத்துடன் ஃபிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கிரிக்கெட்டில் உடல் பருமனுடன் இருப்பதாலேயே பிசிசிஐ அவரை புறக்கணித்து வருவதாக செய்திகள் வெளியானது. அதனால் கோபமடைந்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மெலிந்த உடலை கொண்ட வீரர்கள் வேண்டுமானால் ஆடை அலங்கார நிகழ்ச்சி நடைபெறும் மேடையில் நடந்து செல்லும் மாடல்களை தேர்ந்தெடுங்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.

- Advertisement -

இருப்பினும் மனம் தளராமல் போராடிய சர்ப்ராஸ் கான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற முடிந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2வது பயிற்சி டெஸ்ட் போட்டியில் சதமடித்து இந்தியா ஏ வெற்றி பெற உதவினார். அதன் காரணமாக தற்போது தேசிய அணிக்கு விளையாட தேர்வாகியுள்ள அவர் “இந்தியாவுக்கு விளையாட முதல் முறையாக அழைப்பு வந்துள்ளது. திருவிழாவுக்கு தயாராகுங்கள்” என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரியகுமார் யாதவ் தம்மை வாழ்த்திய புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நேத்து நீ நல்லா ஆடுன.. அதோட ஜெர்சி நம்பரையும் சூப்பரா செலக்ட் பண்ணியிருக்க – 18 வயது வீரரை வாழ்த்திய பாண்டியா

அதே போல சோதனைகள் மற்றும் தடைகளை உடைத்து ஃபீனிக்ஸ் பறவை போல் போராடிய தன்னுடைய மகன் சர்பராஸ் கானை இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்த பிசிசிஐக்கு அவருடைய தந்தை நௌசத் கான் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மும்பை வாரியத்திற்கு நன்றி கூறியுள்ள அவர் இந்தியாவுக்காக தன்னுடைய மகன் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புவதாகவும் உருக்கமான வீடியோவில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement