நேத்து நீ நல்லா ஆடுன.. அதோட ஜெர்சி நம்பரையும் சூப்பரா செலக்ட் பண்ணியிருக்க – 18 வயது வீரரை வாழ்த்திய பாண்டியா

Hardik-and-Arshin
- Advertisement -

கடந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் பல்வேறு இளம் வீரர்கள் ஒவ்வொரு அணிக்காகவும் வாங்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற டி20 லீக் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய 18 வயதே நிரம்பிய அர்ஷின் குல்கர்னி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக வாங்கப்பட்டிருந்தார். அப்போதே அவர் யார்? என்பது குறித்த தேடல் அனைவரது மத்தியிலும் இருந்தது.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மகாராஷ்டிரா அணிக்காக அசத்திய அவர் தற்போது 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணிக்காகவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். துவக்க வீரரான அவர் பந்துவீச்சில் அசத்தக்கூடியவர் என்பதால் அவர்மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கிய அவர் 118 பந்துகளை சந்தித்து 108 ரன்கள் அடித்து அட்டகாசப்படுத்தி இருந்தார். துவக்க வீரர் என்பது மட்டுமின்றி அவர் ஒரு மிதவேகப்பந்து வீச்சாளர் என்பதால் ஆல்ரவுண்டான அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதிலும் குறிப்பாக தற்போது இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா மட்டுமே ஆல்ரவுண்டராக இருக்கும் வேளையில் இவரை போன்ற இளம் வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இவரது சிறப்பான ஆட்டத்தை கண்ட ஹார்டிக் பாண்டியா அவரை பாராட்டி ஒரு சிறிய பதிவினை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ஹார்டிக் பாண்டியா குறிப்பிட்டதாவது : நேற்று நீங்கள் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய அற்புதமான இன்னிங்சிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய நல்ல எதிர்காலத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அதுமட்டும் இன்றி உங்களது ஜெர்சி நம்பரை அருமையாக தேர்வு செய்துள்ளீர்கள் என்று பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க : அண்டர்-19 உ.கோ 2024 : 201 ரன்ஸ்.. அமெரிக்காவை அசால்ட்டாக வீழ்த்திய இந்தியா.. சூப்பர் 6இல் மோதுவது யார்?

இப்படி ஹார்டிக் பாண்டியா அவரது ஜெர்சி நம்பர் குறித்து பாராட்டியதற்கு காரணம் யாதெனில் : சர்வதேச கிரிக்கெட்டில் ஹார்டிக் பாண்டியா 33 என்கிற நம்பர் கொண்ட ஜெர்சியையே அணிந்து விளையாடுகிறார். அதனையே அர்ஷின் குல்கர்னியும் அணிந்து விளையாடுவதால் அவரை பாண்டியா வாழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement