அண்டர்-19 உ.கோ 2024 : 201 ரன்ஸ்.. அமெரிக்காவை அசால்ட்டாக வீழ்த்திய இந்தியா.. சூப்பர் 6இல் மோதுவது யார்?

Under 19 World Cup IND vs USA
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் வருங்காலத்தில் அசத்தப்போகும் தரமான வீரர்களை முன்கூட்டியே அடையாளப்படுத்தும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை 2024 தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் உதய் சஹரன் தலைமையில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் இந்தியா தன்னுடைய முதல் 2 லீக் போட்டிகளில் வங்கதேசம் மற்றும் அயர்லாந்தை எளிதாக தோற்கடித்தது.

அதைத்தொடர்ந்து ஜனவரி 28ஆம் தேதி இந்தியா தன்னுடைய கடைசி லீக் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டது. ப்ளூம்போண்டீன் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 326/5 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக அர்சின் குல்கர்னி சதமடித்து 108 (118), முசிர் கான் 73 (76) ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

சூப்பர் 6இல் இந்தியா:
அமெரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக அதீந்தரா சுப்பிரமணியன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 327 என்ற கடினமான இலக்கை துரத்திய அமெரிக்கா முடிந்தளவுக்கு போராடியும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 50 ஓவர்களில் 125/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக உட்கர்ஸ் ஸ்ரீவஸ்தவா 40 ரன்கள் எடுக்க இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக நமன் திவாரி 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதனால் 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா லீக் சுற்றின் முடிவில் குரூப் 1 பட்டியலில் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி துவங்கும் சூப்பர் 6 சுற்றின் குரூப் 1 பிரிவில் இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாள் அணிகளும் குரூப் 2 பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் விளையாடுவதற்கு பிரிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் வெவ்வேறு நிலையில் லீக் சுற்றை முடித்த தொடர்புடைய குழுவின் எதிரணிகளை எதிர்கொள்ளும். அந்த சூப்பர் 6 சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் பிப்ரவரி 6, 8 தேதிகளில் நடைபெறும் செமி ஃபைனலில் விளையாட தகுதி பெறும். அதன் படி இந்தியா தங்களுடைய சூப்பர் 6 சுற்றில் நியூசிலாந்து மற்றும் நேபாள் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணிக்காக விளையாட சாதனை நாயகன் ஷமர் ஜோசப்புக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ

அந்த வகையில் இந்தியா தங்களுடைய சூப்பர் 6 சுற்றில் ஜனவரி 30ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராகவும் பிப்ரவரி 2ஆம் தேதி நேபாளுக்கு எதிராகவும் களமிறங்க உள்ளது. இந்த 2 போட்டிகளுமே இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தென் ஆப்பிரிக்காவில் உள்ள ப்ளூம்போண்டீன் நகரில் துவங்க உள்ளது. இந்த போட்டிகளை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்ட் மொபைல் ஆப் வாயிலாக பார்க்க முடியும்.

Advertisement