சி.எஸ்.கே அணிக்காக விளையாட சாதனை நாயகன் ஷமர் ஜோசப்புக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ

Shamar-Joseph
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது எதிர்வரும் மார்ச் இறுதி வாரத்தில் துவங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரானது சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி சீசனாக அமையும் என்பதனால் இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு நடப்பு சாம்பியனாக சென்னை அணி இந்த தொடரில் விளையாட இருக்கும் வேளையில் இம்முறையும் கோப்பையை வென்று தோனியை வெற்றியுடன் வழியனுப்ப அனைவருமே விரும்புகின்றனர். அதற்காக தற்போது சிஎஸ்கே அணியின் வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் சிஎஸ்கே அணி பயிற்சி முகாமை தொடங்கும் என்றும் அதன் பிறகு அனைவரும் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்றும் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அண்மையில் நடைபெற்று முடிந்த மினி ஏலத்தில் சென்னை அணிக்காக வாங்கப்பட்ட வங்கதேச அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரகுமான் மே மாதம் 11-ம் தேதி வரை தான் சென்னை அணிக்காக விளையாட வங்காதேச அணி ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட போட்டிகள் மற்றும் பிளே ஆப் சுற்று போட்டிகளுக்கான அணியிலிருந்து அவர் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதனால் மாற்றுவீரரை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலை சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் சிஎஸ்கே அணி மாற்று வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப்பை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஒரே மேட்ச்ல யோசிக்க வெச்சுட்டோம்.. அடுத்ததா அதுல கை வெச்சாலும் இந்தியாவை வீழ்த்துவோம்.. மார்க் வுட்

ஏனெனில் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமான ஷமர் ஜோசப் தனது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அந்த அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளது அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்த வேளையில் சிஎஸ்கே அணி நிர்வாகமும் நல்ல உயரம் கொண்ட, வேகமும் கலந்த இவரை வாங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement