ஒரே மேட்ச்ல யோசிக்க வெச்சுட்டோம்.. அடுத்ததா அதுல கை வெச்சாலும் இந்தியாவை வீழ்த்துவோம்.. மார்க் வுட்

Mark Wood 3
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெறும் இத்தொடரில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஏனெனில் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. ஆனாலும் இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடியாக விளையாடி இந்தியாவை அதனுடைய சொந்த ஊரில் மண்ணை கவ்வ வைப்போம் என்று இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே எச்சரித்தனர்.

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவோம்:
குறிப்பாக 2022 நவம்பர் மாதம் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் தோற்கடித்தது போல் இந்தியாவை வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து வீரர் மார்க் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சொன்னது போலவே முதல் போட்டியில் தங்களுடைய அணி வென்றுள்ளதால் இந்தியா அடுத்த போட்டியில் இன்னும் அதிகமாக சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடிய பிட்ச்சை தயாரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக மார்க் வுட் கூறியுள்ளார்.

இருப்பினும் எந்த திட்டத்துடன் வந்தாலும் அதை சமாளித்து இந்தியாவை தோற்கடிக்க தாங்கள் தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பிபிசி ஸ்போர்ட் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “தற்போது இந்தியா வித்தியாசமான திட்டத்துடன் வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளோம். இந்த தொடரில் 5 போட்டிகள் இருக்கிறது. முதல் போட்டியில் பெற்ற வெற்றியை வைத்து எதையும் நாங்கள் எளிதாக விட்டு விடமாட்டோம் என்று இந்தியாவுக்கு நிரூபித்துள்ளோம்”

- Advertisement -

“ஏனெனில் அது எங்களுடைய மகத்தான வெற்றிகளில் ஒன்றாகும். இத்தொடரின் துவக்கத்தில் மக்கள் எங்கள் மீது சந்தேகமாக இருந்தனர். ஆனால் எங்களுடைய அணியில் எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. தற்போது இத்தொடரை வெல்ல முடியும் என்பது எங்களுக்கு தெரியும். அதை நிறுத்த தற்போது வித்யாசமாக சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியாவை நாங்கள் தள்ளிகிறோம். இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக டாப் அணியான இந்தியா எங்களை தோற்கடிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்”

இதையும் படிங்க: இங்கிலாந்தை சாய்க்க போன வருசம் யூஸ் பண்ண அந்த திட்டத்தை எடுங்க.. இந்திய அணிக்கு டிகே ஆலோசனை

“அடுத்த போட்டியில் அவர்கள் எந்த மாதிரியான பிட்ச்சை உருவாக்குவார்கள் என்பது எனக்கு தெரியாது. அவர்கள் தங்களுடைய சொந்த மண்ணில் எந்த மாதிரியான பிட்ச்சையும் உருவாக்கும் சக்தி வாய்ந்தவர்கள். இருப்பினும் தற்போது அவர்கள் வித்தியாசமாக சிந்திப்பதற்கான நிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்” கூறினார். இதைத் தொடர்ந்து 2வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement