இங்கிலாந்தை சாய்க்க போன வருசம் யூஸ் பண்ண அந்த திட்டத்தை எடுங்க.. இந்திய அணிக்கு டிகே ஆலோசனை

Dinesh Karthik 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக முதல் இன்னிங்ஸ் 190 ரன்கள் முன்னிலை பெற்று முதல் 3 நாள்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4வது நாளில் இங்கிலாந்து கொடுத்த 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி பரிதாபமாக தோற்றது.

முன்னதாக இந்த தொடரில் டி20 கிரிக்கெட்டை போல இந்தியாவை அடித்து நொறுக்கி தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து தற்போது அதை செயலிலும் காட்டத் துவங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் தரமான சுழல் பந்துகளை ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை பயன்படுத்தி இங்கிலாந்து அட்டாக் செய்து பெரிய ரன்கள் குவித்து வெற்றி கண்டது.

- Advertisement -

ஸ்பெஷல் திட்டம்:
இந்நிலையில் இந்த தொடரில் சாதாரணமாக விளையாடும் திட்டங்களை பின்பற்றினால் இந்தியாவால் வெல்ல முடியாது என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். எனவே 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய யுத்தியை இத்தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

“பல நேரங்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடும் உங்களுக்கு அழுத்தம் இருக்கும். குறிப்பாக எதிரணி பவுலர்கள் நன்றாக பந்து வீசும் போது உங்களுக்கு எந்த ஷாட்டை எடுத்து அடிக்க வேண்டும் என்பது தெளிவாக தெரியாது. இருப்பினும் போட்டியின் பல்வேறு நேரங்களில் அந்த பெரிய தருணங்களை இந்திய பேட்ஸ்மேன்கள் தாண்ட விரும்பினால் உலகக் கோப்பையில் விளையாடிய அணுகுமுறை சிறப்பு வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன்”

- Advertisement -

“2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா ஷாட்டுகளை சரியாக அடிப்பதில் முன்னின்று செயல்பட்டார். அதை பல்வேறு நேரங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் சரியாக பின்பற்றினார். அது இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தத்தை குறைத்தது. ஆனால் அது தான் இன்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் பார்க்க முடியவில்லை. பெரிய ஷாட்டுகளை அடிப்பதற்கான தைரியம் நம்மிடம் இல்லை”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணிக்காக தோனி இன்னும் 2 அல்லது 3 சீசன்கள் விளையாட வேண்டும் – இளம்வீரர் விருப்பம்

“ஆனால் பொதுவாக அவர் ஆஃப் ஸ்பின்னர்களை கண்ணை மூடிக்கொண்டு பவுண்டரிகளாக பறக்க விடுவார். ரன்கள் அடிக்காமல் தடுமாறும் போது நீங்கள் அணியில் உங்களுடைய இடத்தை பாதுகாப்பதற்காக விளையாடுவீர்கள். எனவே அனைத்து இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சேர்ந்து இதை செய்ய வேண்டும். அது கடினமான வேலை. ஆனாலும் அவர்கள் அதை தாண்ட வேண்டும்” என்று கூறினார்

Advertisement