சி.எஸ்.கே அணிக்காக தோனி இன்னும் 2 அல்லது 3 சீசன்கள் விளையாட வேண்டும் – இளம்வீரர் விருப்பம்

Dhoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக எதிர்வரும் கோடைகாலத்தில் ஐபிஎல் தொடரின் 17-வது சீசனானது நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இவ்வேளையில் எதிர்வரும் ஐ.பி.எல் தொடர் குறித்தும், கேப்டன் தோனி குறித்து சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது தோனி முழுமையாக குணமடைந்துவிட்டார். என்னை பொறுத்தவரை அவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று சீசன்களில் சென்னை அணிக்காக விளையாட வேண்டும். ஏனெனில் இந்திய வீரர்களை தாண்டி வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களும் தோனியுடன் பேசவும், நேரத்தை செலவிடவும் விரும்புகிறார்கள்.

தோனி பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். அணியில் உள்ள எல்லோரையும் சரிசமமாக நடத்தக்கூடியவர். அதே நேரத்தில் கிரிக்கெட் பற்றிய தெளிவான புரிதலை வைத்திருப்பவர். எனவே தோனியுடன் நேரத்தை செலவிடுவது என்பது அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்குமே பிடிக்கும்.

- Advertisement -

என்னை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் தோனி மீது அதிக பாசம் வைத்திருக்கிறேன். தோனி என்னுடைய மூத்த அண்ணன் போன்றவர். அவரும் என்னை தம்பியாக பார்ப்பார் என்று நம்புகிறேன். எங்களுக்குள் பல வேடிக்கையான தருணங்கள் இருந்திருக்கின்றன.

இதையும் படிங்க : 2வது போட்டியில் இருந்து விலகிய ராகுல், ஜடேஜா.. தமிழக வீரர் உட்பட 3 இளம் மாற்று வீரர்களை அறிவித்த பிசிசிஐ

களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நான் நிறைய நேரத்தை அவருடன் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய கிரிக்கெட் கரியரில் அவரது வழிகாட்டுதல் மிக முக்கியமானது என தீபக் சாஹர் கூறியது குறிப்பிடத்தக்கது. தனது தந்தையில் உடல்நல குறைவு காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய தீபக் சாஹர் மீண்டும் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement