இதெல்லாம் சரி.. சர்பராஸ் கானுக்கு உண்மையான சவால் அங்க தான் காத்திருக்கு.. கங்குலி கருத்து

Sourav Ganguly 2
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. முன்னதாக மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் சர்பராஸ் கான் ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் கடந்த 4 வருடங்களாக தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்து போராடி வந்தார்.

இருப்பினும் புஜாரா போன்ற மூத்த வீரர்கள் இருந்ததால் தேர்வுக் குழு அவரை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்தது. ஆனாலும் மனம் தளராமல் போராடி வந்த அவர் இத்தொடரில் விராட் கோலி போன்ற சில முக்கிய வீரர்கள் விளையாடாததால் முதல் முறையாக இந்தியாவுக்காக தேர்வானார். அதைத் தொடர்ந்து கே.எல். ராகுல் காயத்தால் விலகியதால் மூன்றாவது போட்டியில் அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

கங்குலி அறிவுரை:
அந்த முதல் வாய்ப்பிலேயே 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்த அவர் அறிமுக போட்டியிலேயே 2வது அதிவேகமான அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனையை சமன் செய்தார். இருப்பினும் ஜடேஜாவுடன் ஏற்பட்ட தவறான புரிதலால் 62 ரன்களில் ரன் அவுட்டான அவர் 2வது இன்னிங்சில் அட்டகாசமாக விளையாடி 68* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

அதன் வாயிலாக அறிமுகப் போட்டியின் 2 இன்னிங்சிலும் அரை சதமடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து போராடினால் இந்தியாவுக்காக விளையாடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சர்பராஸ் கான் அறிமுகமாகி அசத்தியுள்ளதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் உண்மையான சவால் வெளிநாட்டு மண்ணில் ரன்கள் குவிப்பதில் தான் இருக்கிறது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி மிட்-டே இணையத்தில் பேசியது பின்வருமாறு. “யசஸ்வி ஜெயிஸ்வால் நல்ல வீரர். அவர் இந்தியாவுக்காக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு தகுதியானவர். சர்பராஸ் கான் தன்னுடைய கேரியரை நேர்மறையாக துவங்கியுள்ளார்”

இதையும் படிங்க: 2 அட்டவணை வரும்.. ஐபிஎல் 2024 தொடர் துவங்கும் இடம், தேதியை இப்போதே வெளியிட்ட சேர்மேன்

“ஆனால் வெளிநாட்டு சூழ்நிலைகளில் தான் அவருக்கு மிகப்பெரிய சோதனை காத்திருக்கும். எனவே அவர் இந்திய துணை கண்டத்திற்கு வெளியே தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும். அதே சமயம் தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட்டில் நீங்கள் தொடர்ந்து ரன்கள் அடித்தால் நாட்டுக்காக விளையாட முடியும் என்பதற்கு சர்பராஸ் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் நான்காவது போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் துவங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement