கங்குலி டிராவிட் சேர்ந்து நிகழ்த்திய சாதனையை நூலிழையில் தவறவிட்ட சர்பராஸ் ஜுரேல் ஜோடி – விவரம் இதோ

Sarfaraz-and-Jurel
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது ராஜ்கோட் நகரில் பிப்ரவரி 15-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகிய இருவரும் இந்திய அணிக்காக முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட அறிமுகமாகினர்.

அந்தவகையில் இந்த போட்டியில் அறிமுகமான சர்பராஸ் கான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 66 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 62 ரன்கள் குவித்தார். அதேபோன்று பின் வரிசையில் களமிறங்கிய துருவ் ஜூரேல் 104 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 46 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பொதுவாகவே இந்திய அணி சார்பாக ஒரே போட்டியில் இரண்டு வீரர்கள் அறிமுகமாவது என்பது அரிதான விடயம். அதிலும் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஒன்றாக ஒரு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவது அரிதிலும் அரிதான ஒரு விடயம்.

இந்நிலையில் இந்த போட்டியில் ஜோடியாக அறிமுகமான சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் 4 ரன்கள் வித்தியாசத்தில் கங்குலி மற்றும் டிராவிட் ஆகியோர் நிகழ்த்திய சாதனையை தவறவிட்டனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஒன்றாக அறிமுகமாகியிருந்தனர். அந்த போட்டியில் இருவருமே அரை சதம் அடித்து சாதனையும் நிகழ்த்தியிருந்தனர். அதை தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு பேட்ஸ்மேன்கள் ஒன்றாக அறிமுகமாகி இருந்தனர்.

இதையும் படிங்க : கும்ப்ளேவை ஓரங்கட்டிய அஸ்வின்.. முதல் இந்தியராக கபில் தேவ் போன்ற யாருமே படைக்காத தனித்துவ சாதனை

ஆனால் அதில் சர்பராஸ் கான் அரைசதம் அடித்த வேளையில் துருவ் ஜுரேல் 46 ரன்களில் ஆட்டமிழந்துதால் அந்த சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு தவறி போனது. ஒருவேளை ஜுரேல் 50 ரன்கள் அடித்திருந்தால் சர்பராஸ் கான் மற்றும் ஜுரேல் ஆகியோர் 28 ஆண்டுகள் கழித்து அற்புதமான சாதனையை நிகழ்த்தி இருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement