கும்ப்ளேவை ஓரங்கட்டிய அஸ்வின்.. முதல் இந்தியராக கபில் தேவ் போன்ற யாருமே படைக்காத தனித்துவ சாதனை

- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் போராடி 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து 131, ரவீந்திர ஜடேஜா 12 ரன்கள் எடுத்தனர்.

கூடவே சர்பராஸ் கான் 62, துருவ் ஜுரேல் 46 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்களை எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜாக் கிராவ்லி 15 ரன்களில் அஸ்வின் சுழலில் அவுட்டானார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் பென் டுக்கெட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வேகமாக ரன்களை சேர்த்து சவாலை கொடுத்தார்.

- Advertisement -

அஸ்வின் சாதனை:
நேரம் செல்ல செல்ல தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 88 பந்துகளில் சதமடித்தார். அவருடன் நிதானமாக விளையாடிய ஓலி போப் 39 ரன்களில் அவுட்டானார். இறுதியில் நிறைவுக்கு வந்த இரண்டாவது நாள் முடிவில் 207/2 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்துக்கு களத்தில் பெண் டுக்கெட் 133*, ஜோ ரூட் 9* ரன்களுடன் உள்ளனர்.

முன்னதாக இந்த போட்டியில் எடுத்த விக்கெட்டையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். குறிப்பாக 184 இன்னிங்ஸில் 500 விக்கெட்டுகளை எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. முத்தையா முரளிதரன் : 144
2. ரவிச்சந்திரன் அஸ்வின் : 184
3. அனில் கும்ப்ளே : 188
4. ஷேன் வார்னே : 201

- Advertisement -

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500* விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். அத்துடன் பேட்டிங்கில் 98 போட்டிகளில் 3308 ரன்களையும் எடுத்துள்ள அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 500 விக்கெட்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையையின் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: உண்மையான பஸ்பால் ஆடிய பென் டுக்கெட்.. இந்தியாவை பிரித்து மேய்ந்து 34 வருட புதிய வரலாற்று சாதனை

இதற்கு முன் கபில் தேவ் உட்பட வேறு எந்த இந்திய வீரர்களும் இந்த சாதனையை படைத்ததில்லை. உலக அளவில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே மற்றும் இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். அந்த வகையில் தனித்துவ சாதனையை படைத்துள்ள அவர் தமிழ்நாட்டிற்கும் தமிழக ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement