IND vs PAK : அது மட்டும் நடக்காம இருந்திருந்தா நாங்க ஜெயிச்சுருப்போம் – அறிவாளியாக பேசும் முன்னாள் பாக் கேப்டனுக்கு ரசிகர்கள் பதிலடி

Hardik Padnday IND vs PAk
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த 2022 ஆசிய கோப்பை தொடரின் 2வது லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் பெரிய ரன்களை குவிக்க முடியாமல் 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிக பட்சமாக முஹம்மது ரிஸ்வான் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 147 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் டக் அவுட்டானாலும் ரோகித் சர்மா 12, விராட் கோலி 35 என முக்கிய வீரர்கள் கணிசமான எடுத்தனர். அத்துடன் மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் 18 ரன்களில் அவுட்டானாலும் ரவீந்திர ஜடேஜா 35 ரன்களும் ஹர்டிக் பாண்டியா 33* (17) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். அதனால் கடைசி ஓவரில் வென்ற இந்தியா கடந்த வருடம் இதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் உலகக் கோப்பையில் முதல் முறையாக படுதோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து இந்த ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

- Advertisement -

அறிவாளி பேச்சு:
முன்னதாக இந்த போட்டியில் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய பாகிஸ்தான் பந்து வீச்சில் முதல் ஓவரிலிருந்தே துல்லியமாக பந்துவீசி இந்தியாவை எளிதாக வெற்றி பெற விடாமல் கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்து வந்து வெற்றிக்கு போராடியது. ஆனாலும் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட பாகிஸ்தான் வீரர்களை வழக்கம் போல அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த பிரபல நேஷனல் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியின் போது சுமாராக செயல்பட்ட பாகிஸ்தான் வீரர்களை அந்த தொலைக்காட்சியின் பிரபல பெண் பத்திரிக்கையாளர் கடுமையாக விமர்சித்தார்.

அதனால் கோபமடைந்த முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹமத் அந்த பத்திரிகையாளரின் பெயரை குறிப்பிடாமல் தனது டுவிட்டரில் சாடியிருந்தார். அதாவது கடைசி ஓவர் வரை போராடிய தங்களது அணியை பாராட்டாமல் பத்திரிகையாளர் என்ற பெயரில் விமர்சிப்பது சரியல்ல என்று தெரிவித்த அவர் மெதுவாக பந்து வீசியதன் காரணமாக 17வது ஓவர் முதல் உள் வட்டத்திற்கு வெளியே ஒரு பீல்டர் குறைக்கப்பட்டது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்ததாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

சமீப காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்து வீசி முடிப்பதற்கு அனைத்து அணிகளும் அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொள்வதால் அதை கட்டுபடுத்த நினைத்த ஐசிசி சமீபத்தில் விதிமுறைகளை மாற்றி வெளியிட்டது. அதாவது ஒரு அணி ஒரு இன்னிங்க்சில் பந்து வீசும் போது 20 ஓவர்களையும் 85 நிமிடங்களுக்குள் வீசி முடிக்க வேண்டும். இல்லையேல் உள் வட்டத்திற்கு வெளியே ஒரு பீல்டர் குறைக்கப்பட்டு களத்திலேயே தண்டனை வழங்கப்படும். அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பாகிஸ்தான் 3 ஓவர்கள் குறைவாக பந்து வீசியதால் 18, 19, 20 ஆகிய ஓவர்களில் விதிமுறைப்படி உள் வட்டத்திற்கு வெளியே ஒரு பீல்டர் குறைக்கப்பட்டது.

அதை பயன்படுத்தி 19வது ஓவரில் 3 பவுண்டரிகளை ஹர்திக் பாண்டியா அடித்தது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. அந்த வகையில் அந்த விதிமுறை பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியதாக சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் “ஆஹா என்ன ஒரு அறிவாளி தனமான பேச்சு என்ற வகையில் அவரை கலாய்க்கிறார்கள். ஏனெனில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தபோது இந்தியாவும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட 2 ஓவர்கள் குறைவாக வீசியதால் 19, 20 ஆகிய ஓவர்களில் ஒரு ஃபீல்டர் குறைக்கப்பட்டது.

இதையும் படிங்க: விராட் கோலி இப்படி பண்ணது என்னால ஏத்துக்கவா முடியல – விராட் கோலியை விளாசிய கவுதம் கம்பீர்

அதன் காரணமாகவே கடைசி நேரத்தில் ஹாரீஸ் ரவூப் 13* (7), தஹானி 16 (6) என டெயில் எண்டர்கள் கணிசமான ரன்களை குவித்து பாகிஸ்தானின் மானத்தைக் காத்தனர். அந்த நிலைமையில் எண்ணமோ பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் தான் அந்த விதிமுறை பயன்படுத்தப்பட்டது போல் சர்பராஸ் கான் பேசுவது கொஞ்சமும் நியாயமல்ல என்று தெரிவிக்கும் இந்திய ரசிகர்கள் தோல்வியை சமாளிக்க பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இப்படி எல்லாம் சமாளிப்பது காலம் காலமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Advertisement