விராட் கோலி இப்படி பண்ணது என்னால ஏத்துக்கவா முடியல – விராட் கோலியை விளாசிய கவுதம் கம்பீர்

Gautam-Gambhir-and-Virat-Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே பேட்டிங் ஃபார்ம் இன்றி தவித்து வருவதன் காரணமாக அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தன. அதோடு இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த தொடரிலும் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவே ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரின் போது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

India Virat Kohli Rohit Sharma Bhuvanewar Kumar Dinesh Karthik

இந்நிலையில் தற்போது ஆசியக் கோப்பை தொடருக்காக மீண்டும் சிறிய இடைவெளிக்கு பின்னர் திரும்பிய விராட் கோலி கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார். அந்த போட்டி அவரது நூறாவது சர்வதேச டி20 போட்டியாக அமைந்தது. அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான வடிவத்திலும் 100 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

- Advertisement -

சர்வதேச அளவில் இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றார். இந்நிலையில் தற்போது மீண்டும் களத்திற்கு வந்த விராட் கோலி இந்த போட்டியில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் விராட் கோலியின் ஆட்டமிழந்த விதம் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் தனது காட்டமான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.

Virat Kohli IND vs PAK

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் விராட் கோலி ஆட்டம் இழந்த விதத்தால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். ஏனெனில் ஏற்கனவே கே.எல் ராகுல் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்த பிறகு ரோகித்தும் ஒரு முக்கிய கட்டத்தில் ஆட்டமிருந்து வெளியேறி விட்டார். அந்த நேரத்தில் அனுபவ வீரரான கோலி களத்தில் நின்று விளையாட வேண்டியது அவசியம். ஆனால் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அவர் தேவையில்லாமல் ஒரு ஷாட்டை விளையாடி ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

நீங்கள் ஒன்றும் இளம் வீரர் கிடையாது. இதேபோன்று மோசமான ஷாட்டை விளையாடுவது சதவறானது. சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு அனுபவம் வாய்ந்த திறமையான வீரரான நீங்கள் அதுபோன்ற ஷாட்டை அடித்திருக்கக் கூடாது என கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சேசிங்கின் போது இந்திய அணி கேப்டனை இழந்த வேளையில் மறுமுனையில் ஒரு அனுபவ வீரராக நீங்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : IND vs PAK : முழு மூச்சுடன் போராடி தோல்வியாலும் வலியாலும் கண்ணீர் விட்டு அழுத இளம் பாக் வீரர் – திறமையை பாராட்டும் இந்திய ரசிகர்கள்

ஆனால் தேவையே இல்லாமல் விராட் கோலி இந்த போட்டியில் அதிரடியாக ஆட முயற்சித்துக் கொண்டே இருந்தார். ஆனால் போட்டியின் சூழ்நிலைக்கு அவர் அதிரடியாக விளையாடி சிக்ஸ் அடிக்க தேவையே இல்லை என்றும் தேவையின்றி தனது விக்கெட்டை விராட் கோலி இழந்துவிட்டார். இந்த மோசமான ஷாட்டால் விராட் கோலி விரைவில் ஆட்டமிழந்தார் என கம்பீர் விமர்சித்து குறிப்பிடத்தக்கது.

Advertisement