பால் குடிக்கும் குழந்தை போன்ற வீரர்களை வெச்சு தோனி, விராட், ரோஹித் அடங்கிய இந்தியாவை செஞ்சோம் – சர்பராஸ் அதிரடி பேட்டி

Sarfaraz
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக ஐசிசி மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அண்டை நாடுகளாக இருப்பதால் பொதுவாகவே இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி வெற்றி பெறுவதற்கு முழுமூச்சுடன் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். அதிலும் குறிப்பாக ஐசிசி தொடர்களில் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் சந்தித்த முதல் தோல்வியை தவிர்த்து கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பாகிஸ்தானை தொடர்ந்து தோற்கடித்து வரும் இந்தியா வெற்றிகரமான அணியாகவே செயல்பட்டு வருகிறது.

Bumrah

- Advertisement -

ஆனாலும் கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா முதல் முறையாக விராட் கோலி தலைமையில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு நாக் அவுட் சுற்றிலும் அசத்தி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. ஆனால் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் சொதப்பிய இந்தியா 180 வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 338/4 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

குழந்தைகளை வெச்சு:
குறிப்பாக குறைவான ரன்களில் இருந்த போது அவுட்டாக்கிய பும்ரா நோ-பால் வீசியதை பயன்படுத்திய பகார் ஜமான் அதிரடியாக சதமடித்து 114 (106) ரன்களை விளாசி இந்தியாவின் கனவை பாதி நொறுக்கினார். மீதி கனவை 339 ரன்களை துரத்தும் போது முகமது ஆமீரின் அதிரடியான ஸ்விங் வேகப்பந்துகளில் ரோகித் சர்மா 0, விராட் கோலி 5, ஷிகர் தவான் 22 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி உடைத்தனர். அதனால் கோப்பையை வென்று சரித்திரம் படைத்த பாகிஸ்தானின் கேப்டன் சர்ப்ராஸ் அஹமத் கேரியரில் அதுவே முதலும் கடைசியுமான உச்சகட்ட சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

Amir

இந்நிலையில் அந்த போட்டியில் தோனி, விராட், ரோகித் போன்ற தரமான அனுபவ வீரர்கள் அடங்கிய இந்தியாவை பகார் ஜமான், பாபர் அசாம் போன்ற பால் பற்களை இழக்காத குழந்தை போன்ற இளம் வீரர்களை வைத்து சாயத்ததாக சர்பராஸ் அஹமத் அதிரடியாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற நினைவுகளை நான் எப்போதும் மறக்க மாட்டேன். இந்தியாவுக்கு எதிராக அந்த ஃபைனலில் வென்றதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது”

- Advertisement -

“அது சாதாரண போட்டியாக இருந்தால் அவ்வளவு ஸ்பெஷலாக இருக்காது. இந்தியாவுக்கு எதிராக நாங்கள் இதற்கு முன் ஐசிசி மற்றும் இருதரப்பு தொடர்களில் வென்றுள்ளோம். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்களுக்கு எதிராக நாங்கள் அதிக வெற்றிகளை பெற்றுள்ளோம். ஆனால் அந்த இலக்கை சேசிங் செய்யக்கூடிய அவ்வளவு வலுவான இந்திய அணியை தோற்கடித்தது அபாரமானது. அவர்களுக்கு எந்த இலக்கும் பெரிதல்ல. ஏனெனில் இந்திய அணியில் எம்எஸ் தோனி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், யுவராஜ் சிங், விராட் கோலி போன்றவர்கள் இருந்தனர்”

Sarfaraz-1

” ஆனால் எங்களது அணியில் பால் பற்களை இழக்காத வீரர்களைக் கொண்டிருந்தோம். குறிப்பாக அந்த சமயத்தில் குழந்தைகளைப் போல் இருந்த இளம் வீரர்கள் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய உச்சத்தை எட்டியுள்ளார்கள். பாபர் அசாம், ஹசன் அலி, ஷடாப் கான், பஹீம் அஹமத் ஆகியோர் அந்த சமயங்களில் இளம் வீரர்களாக இருந்தனர்”

இதையும் படிங்க:முதல் பாகிஸ்தான் வீரராக டி20 கிரிக்கெட்டில் அசத்தலான சாதனையை நிகழ்த்திய ஷதாப் கான் – விவரம் இதோ

“அதன் காரணமாக அந்த சமயத்தில் இருந்த இந்திய அணியை எங்களுடன் ஒப்பிட்டால் ஒன்றுமே கிடையாது. எங்களது அணியில் முகமது ஹபீஸ் மற்றும் சோயப் மாலிக் ஆகிய 2 அனுபவமிக்க வீரர்கள் மட்டுமே இருந்தனர். இதர வீரர்கள் அனைவரும் புதியவர்களாக இருந்தனர்” என்று கூறினார்.

Advertisement