முதல் பாகிஸ்தான் வீரராக டி20 கிரிக்கெட்டில் அசத்தலான சாதனையை நிகழ்த்திய ஷதாப் கான் – விவரம் இதோ

Shadab-Khan
- Advertisement -

இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற பி.எஸ்.எல் தொடருக்கு அடுத்து பாகிஸ்தான் அணியானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான அணி கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியிடம் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது.

Nabi

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்று விளையாடிய பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஷதாப் கான் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை ஒன்றினை பாகிஸ்தான் அணி சார்பாக முதல்வீரராக நிகழ்த்தியுள்ளார்.

அதன்படி இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் ஆகிய வீரர்கள் ஓய்வெடுத்துக் கொண்ட வேளையில் ஷதாப் கான் கேப்டன்சி செய்தார்.

Shadab Khan 1

இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் பவுலர் என்ற சாதனையை படைத்த அவர் ஷாகித் அப்ரிடியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : இப்போதைக்கு அவர் ஒருத்தர் தான் உலகிலேயே நம்பர் ஒன் ஃபீல்டரா இருக்காரு – இந்திய வீரரை பாராட்டும் ஜான்டி ரோட்ஸ்

மேலும் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆறாவது சர்வதேச பவுலர் என்ற சாதனையும் ஷதாப் கான் படைத்துள்ளார். இந்த பட்டியலில் ஏற்கனவே டிம் சவுதி, ஷாகிப் அல் ஹசன், ரஷீத் கான், இஷ் சோதி, லசித் மலிங்கா ஆகிய ஐந்து பேர் இருந்த நிலையில் தற்போது ஆறாவது வீரராக ஷதாப் கான் இந்த பட்டியலில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement