IPL 2023 : இப்போதைக்கு அவர் ஒருத்தர் தான் உலகிலேயே நம்பர் ஒன் ஃபீல்டரா இருக்காரு – இந்திய வீரரை பாராட்டும் ஜான்டி ரோட்ஸ்

Rhodes
- Advertisement -

இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் துவங்குகிறது. இந்த தொடரில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார். கிரிக்கெட்டில் ஆரம்ப காலங்களில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய 2 துறைகளில் அசத்துவது மட்டுமே வெற்றியில் முக்கிய பங்காற்றும் ஒன்றாக இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் பந்தை பவுண்டரியை தொடவிடாமல் வேகமாக ஓடி தடுத்து நிறுத்துவது, உள்வட்டத்திற்குள் நின்று பந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் பிடித்து பேட்ஸ்மேன் வெள்ளை கோட்டை தொடுவதற்குள் ரன் அவுட் செய்வது என ஃபீல்டிங் துறையில் புதிய பரிணாமங்களை ஏற்படுத்திய அவர் ஃபீல்டிங் மிகச் சிறப்பாக செயல்பட்டால் வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை தன்னுடைய துடிதுடிப்பான செயல்பாடுகளால் நிரூபித்தார்.

குறிப்பாக 1992 உலகக்கோப்பையில் 48 (44) ரன்கள் எடுத்து அச்சுறுத்தலை கொடுத்த இன்சாமாமை சூப்பர்மேனை போல் தாவி ரன் அவுட் செய்த அவர் இறுதியில் தென்னாபிரிக்கா 20 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் வரலாற்றின் மிகச் சிறந்த ஃபீல்டராக ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் அவரது வருகைக்குப் பின்பு தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஃபீல்டிங் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மிகவும் பிரபலமானது.

 

- Advertisement -

Jadeja 1

சிறந்த ஃபீல்டர்:
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இருக்கும் அவரிடம் தற்சமயத்தில் உலக அரங்கில் அசத்தும் டாப் 3 ஃபீல்டர்களை பெயரிடுமாறு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மட்டும் தான் தற்போதைய நிலையில் ஒரே சிறந்த ஃபீல்டராக இருப்பதாக தெரிவித்த ஜான்டி ரோட்ஸ் ஃபீல்டிங் துறை மற்றும் அதற்கு தேவையான பயிற்சியாளர்கள் பற்றி பேசியது பின்வருமாறு. “தற்போதைய நிலைமையில் ஒருவர் மட்டும் தான் இருக்கிறார் – ரவீந்திர ஜடேஜா. பொதுவாக ஐபிஎல் துவங்கும் போது தான் அனைவரும் ஃபீல்டிங் துறையில் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள்”

“இப்போதும் அனைத்து அணிகளிலும் ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை. மேலும் 50 ஓவர் கிரிக்கெட்டில் உங்களுக்கு போதுமான நேரம் இருக்கும். அதில் 6 – 7 வீரர்கள் சுமாராக இருந்தாலும் ஃபீல்டிங் துறையில் அசத்தும் 3 – 4 வீரர்களை வைத்து வெற்றி காணலாம். ஆனால் ஐபிஎல் துவங்கிய 2008 முதல் ஃபீல்டிங் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. கடந்த 12 – 13 வருடங்களில் அதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. ஆரம்ப காலங்களில் ஒரு அணியில் இருக்கும் 2 – 3 ஃபீல்டர்களை பற்றி மட்டுமே பேசுவோம்”

- Advertisement -

 

Rhodes

“ஆனால் இப்போது அணியில் அனைவரும் மிகச் சிறந்த ஃபீல்டர்களாக இருக்க வேண்டும் என்ற வளர்ச்சியை நோக்கி வந்துள்ளோம். மேலும் ஃபீல்டிங் துறையில் கவனம் செலுத்துவது அவ்வளவு கடினமானதல்ல. ஏனெனில் அது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய துறையாகும். தற்போது பேட்டிங், பவுலிங் போலவே ஃபீல்டிங் பயிற்சியாளர்களும் தினம்தோறும் அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்றி தங்களது வேலையை முடிக்கிறார்கள். இப்போது ஃபீல்டிங் என்பது கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல 34 வயதானாலும் நல்ல உடல் தகுதியுடன் ஃபிட்டாக இருக்கும் ரவீந்திர ஜடேஜா, பேட்டிங், பவுலிங் ஆகிய துறைக்கு நிகராக ஃபீல்டிங் துறையிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு உலகின் நம்பர் ஒன் ஃபீல்டராக அசத்தி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. அதனாலேயே பெரும்பாலும் பவுண்டரி எல்லையின் அருகே நிற்க வைக்கப்படும் அவர் அங்கிருந்து பந்தை எடுத்து ஸ்டம்ப்களை குறி பார்த்து அடித்து பலமுறை பேட்ஸ்மேன்களை ரன் அவுட்டாக்கியுள்ளார்.

Jadeja

இதையும் படிங்க:டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் படைக்காத சாதனையை அசால்டாக செய்து காட்டிய – ரஷீத் கான்

அதனால் பந்து ஜடேஜாவின் கைகளில் இருக்கிறது என்பது தெரிந்தாலே அவரை நன்கு அறிந்த எதிரணி பேட்ஸ்மேன்கள் எக்ஸ்ட்ரா ரன் எடுக்க ஓடக்கூடாது என்று வல்லுநர்கள் கலகலப்புடன் தெரிவிப்பது வழக்கமாகும்.

Advertisement