டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் படைக்காத சாதனையை அசால்டாக செய்து காட்டிய – ரஷீத் கான்

Rashid-Khan
- Advertisement -

பி.எஸ்.எல் தொடர் முடிவடைந்த கையோடு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்து கொண்டது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

Nabi

- Advertisement -

அதன் காரணமாக ஷதாப் கான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட பாகிஸ்தான் அணியே இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றது. அதன்படி நடைபெற்ற இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் ஆப்கானிஸ்தான அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதன்பிறகு இறுதி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தாலும் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான அணி வீழ்த்தி முதல் முறையாக டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது.

rashid

இந்நிலையில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் கேப்டனுமான ரஷித் கான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யாரும் நிகழ்த்தாத சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதன்படி டி20 போட்டிகளில் கடைசியாக அவர் வீசிய நூறு பந்துகளில் பவுண்டரி ஏதும் விட்டுக் கொடுக்காமல் பந்து வீசியுள்ளார். பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிகப்படியான பவுண்டரிகளை அடிக்கும் வேளையில் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தனது ஆதிக்கத்தை செலுத்தி 100 பந்துகளில் அவர் ஒரு பவுண்டரி கூட விட்டுக் கொடுக்காதது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : IPL 2023 : நன்றி சொல்ல வார்த்தை இல்ல, 2017இல் தோனியை கேப்டன்ஷிப் செய்து அதை கத்துக்கிட்டேன் – மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித்

பிறகு 101 ஆவது பந்தில் விக்கெட் வீழ்த்திய அவர் 107 பந்தில் தான் சிக்சரை விட்டுக் கொடுத்துள்ளார். இப்படி ஒரு சாதனையை டி20 கிரிக்கெட்டில் மற்ற பவுலர்களால் படைக்க முடியுமானால் அது மிகவும் கடினமான ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement