IPL 2023 : நன்றி சொல்ல வார்த்தை இல்ல, 2017இல் தோனியை கேப்டன்ஷிப் செய்து அதை கத்துக்கிட்டேன் – மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித்

Steve Smith MS Dhoni
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் மார்ச் 31 முதல் துவங்குகிறது. கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களைக் கடந்து இன்று பணத்திலும் தரத்திலும் நம்பர் ஒன் தொடராக திகழும் ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் நல்ல பார்மில் இருந்தும் சில தரமான வெளிநாட்டு வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. குறிப்பாக நவீன கிரிக்கெட்டில் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக சாதனை படைத்து வரும் ஸ்டீவ் ஸ்மித் ஆரம்பம் முதலே டி20 கிரிக்கெட்டில் தடுமாறி வந்தாலும் 2023 பிக்பேஷ் தொடரில் 2 சதங்களை அடித்து அதிரடியாக செயல்பட்டு தம்மால் டி20 போட்டிகளிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்.

Steve-Smith

- Advertisement -

இருப்பினும் கடந்த ஐபிஎல் தொடரில் அசத்த தவறியதால் விலை போகாத அவர் இந்த வருடம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணையாளராக செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் 103 போட்டிகளில் விளையாடி 2400+ ரன்களை குவித்து ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவத்தை பெற்று ராஜஸ்தான் அணியை சில சீசன்களிலும் 2017ஆம் ஆண்டு புனே அணியை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற கேப்டனாகவும் சாதனை படைத்த அவருக்கு இப்படி ஒரு நிலைமையா என்பது ரசிகர்களுக்கு ஆதங்கமாகவே இருக்கிறது.

தோனியிடம் கற்றுக்கொண்டது:
இருப்பினும் காலத்தின் கட்டாயத்தால் இந்த புதிய பணியை மகிழ்ச்சியுடன் செய்ய காத்திருக்கும் அவர் இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று 4 ஐபிஎல் கோப்பைகளை வென்று மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனியையே 2017 ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் செய்த ஒரே வெளிநாட்டு கேப்டன் என்ற பெருமைக்குரியவர். அதற்கு முந்தைய சீசனில் தோனி தலைமையில் புனே லீக் சுற்றை தாண்டாததால் அடுத்த சீசனில் அவரை அதிரடியாக நீக்கிய அந்த அணி நிர்வாகம் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது. அவரது தலைமையில் அசத்திய புனே ஃபைனலில் மும்பையிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோற்று ஏமாற்றத்தை சந்தித்தது.

Smith

இந்நிலையில் அந்த தொடரில் பல வீரர்களை கேப்டன்ஷிப் செய்த தோனியையே கேப்டன்ஷிப் செய்த அனுபவம் பற்றி ஸ்டீவ் ஸ்மித் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக அவர் நீண்ட நாட்களாக நிறைவற்றை சாதிக்கும் திறமையை கொண்டுள்ள கிரிக்கெட்டின் மகத்தான கேப்டன்களில் ஒருவராக திகழ்கிறார். அதனால் புனே அணிக்கு என்னை கேப்டனாக நியமிக்கப் போவதாக எனக்கு அழைப்பு வந்ததும் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் அந்த சீசனில் தோனி அற்புதமான ஒத்துழைப்பு கொடுத்தார். தம்மால் முடிந்த வழிகளில் எனக்கு உதவி செய்த அவர் மிகச் சிறந்தவர்”

- Advertisement -

“அவரை போன்ற ஒருவரை கேப்டன்ஷிப் செய்தது மிகச்சிறந்த அனுபவமாகவும் அதே சமயம் சற்று பயமாகவும் இருந்தது. ஆரம்பத்தில் அவரிடம் என்ன எதிர்பார்ப்பது என்பது எனக்கு தெரியாமல் இருந்தது. ஏனெனில் சென்னை உட்பட தோனி விளையாடிய அனைத்து அணிகளையும் அவரே கேப்டன்ஷிப் செய்தவர். அதனால் புனே நிர்வாகம் என்னை கேப்டனாக செயல்பட கேட்ட போது எனக்கு ஆச்சரியமாகவும் என்ன சொல்வது என்ற சூழ்நிலையையும் ஏற்படுத்தியது. அப்போது இதைப் பற்றி நீங்கள் தோனியிடம் பேசினீர்களா? என்று கேட்டேன்”

Smith

“அந்த வருடத்தில் புனே அணியை வழிநடத்துவதற்கு அவர் எனக்கு உதவிய விதம் அபாரமானது. அதற்கு அவருக்கு என்னிடம் நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. அந்த சீசனில் விக்கெட் கீப்பராக இருக்கும் அவருக்குத்தான் போட்டியை பற்றிய அனைத்து கோணங்களும் நன்றாக தெரியும். குறிப்பாக அவருடைய சொந்த ஊரான இந்திய மண்ணில் நிலவும் கால சூழ்நிலைகளை அவர் புரிந்து வைத்தவர். எனவே அவரிடம் ஆலோசனைகளை பெறாமல் போனால் நான் முட்டாளாக இருப்பேன். அந்த வருடம் நாங்கள் சாதிப்பதற்கு அவர் மிகவும் உதவினார்”

இதையும் படிங்க: பிசிசிஐ ஏ ப்ளஸ் ஒப்பந்தத்தில் இல்லாமலேய ஐபிஎல் தொடரால் அசால்டாக 7 கோடிகளை அள்ளும் 5 இந்திய வீரர்கள்

“பொதுவாக எது நடந்தாலும் அமைதியாக இருக்கும் அவருடைய பொறுமை எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக முக்கிய நேரங்களில் அவர் பதற்றமடைவதை பெரும்பாலும் நான் பார்த்ததில்லை. 2017இல் மட்டுமல்லாமல் ஆரம்பம் முதலே கூலாக இருக்கும் அவருடைய குணம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவரிடமிருந்து அதை நான் கற்றுக் கொண்டுள்ளேன்” என்று கூறினார்.

Advertisement