பிசிசிஐ ஏ ப்ளஸ் ஒப்பந்தத்தில் இல்லாமலேய ஐபிஎல் தொடரால் அசால்டாக 7 கோடிகளை அள்ளும் 5 இந்திய வீரர்கள்

Deepak-Chahar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 4 விதமான பிரிவில் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஏ ப்ளஸ் பிரிவில் அதிகபட்சமாக 7 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதே போல ஹர்திக் பாண்டியா போன்ற 2 வகையான கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு ஏ பிரிவில் 5 கோடியும், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் புஜாரா போன்ற வீரர்களுக்கு பி பிரிவில் 3 கோடியும், வாஷிங்டன் சுந்தர், ஷிகர் தவான் போன்ற அவ்வப்போது மட்டும் விளையாடும் வீரர்களுக்கு சி பிரிவில் 1 கோடியும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

IND vs AUS

- Advertisement -

இருப்பினும் ஒரு காலத்தில் இந்தியாவுக்காக விளையாடினால் தான் சம்பாதிக்க முடியும் என்ற நிலைமை மாறி போய் இப்போது இந்தியாவுக்கு விளையாடாமலேயே ஐபிஎல் தொடரில் அதைவிட அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற நிலைமை வந்து விட்டது. குறிப்பாக நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 365 நாட்கள் விளையாட ஏ ப்ளஸ் பிரிவில் ஒப்பந்தமாகியுள்ள விராட் கோலி போன்றவர்கள் வாங்கும் 7 கோடி சம்பளத்தை விட ஐபிஎல் தொடரில் இரண்டரை மாதங்கள் விளையாடி சில இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிகமான பணத்தை சம்பாதிக்கிறார்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்:

5. ராகுல் திவாடியா: சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால் கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் முறையாக இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்ட இவர் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறவில்லை.

Rahul Tewatia 3

அதன் பின் தேர்வுக்குழு கண்டுகொள்ளாமல் இருந்து வரும் இவர் 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் 9 கோடிகளுக்கு மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் இந்தியாவுக்கு விளையாடாமலேயே அவர் பல கோடிகளை சம்பாதித்துள்ளார்.

- Advertisement -

4. ஹர்ஷல் படேல்: 2021 ஐபிஎல் தொடரில் ஊதா தொப்பியை வென்று இந்திய அணிக்காக அறிமுகமான இவர் டி20 கிரிக்கெட்டில் ரன் மெஷினாக ரன்களை வாரி வழங்கியதால் அதிரடியாக கழற்றி விடப்பட்டார்.

Harshal

அதனால் இதுவரை இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்காத அவருக்கு பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியலிலும் இது வரை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் என்ன கவலை என்பது போல் பெங்களூரு அணிக்காக இந்த வருடம் விளையாடுவதால் 10.75 கோடிகளை அவர் சம்பாதிக்க தயாராகி வருகிறார்.

- Advertisement -

3. வெங்கடேஷ் ஐயர்: 2021 சீசனில் கொல்கத்தா ஃபைனல் வரை செல்ல ஆல் ரவுண்டராக மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய இவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். ஆனால் அந்த வாய்ப்புகளில் சுமாராகவே செயல்பட்டதுடன் ஹர்திக் பாண்டியா வந்து விட்டதால் இந்திய அணியில் இடத்தை இழந்த இவர் 2022 சீசனில் கொல்கத்தா அணி லீக் சுற்றுடன் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாகும் வகையில் மோசமாக செயல்பட்டார்.

Venkatesh-iyerஆனாலும் அந்த அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ள அவர் 2023 சீசனில் விளையாடி 8 கோடிகளை சம்பாதிக்கும் வகையில் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

2. வருண் சக்கரவர்த்தி: கொல்கத்தான் அணியில் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய இவர் இந்தியாவுக்காக குறைவான போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருந்தும் 2021 டி20 உலக கோப்பைக்கு நேரடியாக விளையாடும் வாய்ப்பு பெற்றார்.

- Advertisement -

Varun

ஆனால் அதில் எதிர்பார்த்த செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறிய அவர் 2022 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போவதற்கு காரணமாகும் வகையில் சொதப்பினார். இருப்பினும் மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ள அவர் இந்த தொடரில் வாங்கும் 8 கோடி சம்பளத்துக்கு சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

1. தீபக் சஹர்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலராக சாதனை படைத்து நிலையான இடத்தை பிடித்திருந்த இவர் கடந்த வருடம் சந்தித்த அடுத்தடுத்த காயங்களால் 2022 டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். மேலும் அடிக்கடி காயத்தை சந்திக்கும் அவரை கடந்த முறை இடம் வகித்த சி பிரிவிலிருந்து இம்முறை பிசிசிஐ முற்றிலுமாக கழற்றி வைத்துள்ளது.

Deepak Chahar IND

இதையும் படிங்க:அவர் இந்திய அணிக்காக விளையாட முழுசா ரெடி ஆயிட்டாரு. சீக்கிரம் அவரை டீம்ல எடுங்க – கங்குலி கருத்து

அதனால் மீண்டும் இந்தியாவுக்கு விளையாடுவதற்காக இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய அவர் இந்தியாவுக்கு ஒரு வருடம் விளையாடினால் கிடைக்கும் 7 கோடிக்கு 2 மடங்கு அதிகமாக 14 கோடியை சென்னை அணிக்காக விளையாடி சம்பாதிக்க உள்ளார்.

Advertisement