- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்கிட்ட 2018 மாதிரி 5 சதமடிக்க போறேன்னு சொன்ன கோலி.. திடீர்னு ஓய்வாக அவங்க தான் காரணம்.. சரந்தீப்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011 முதல் 2025 வரை இந்தியாவுக்காக விளையாடிய அவர் 123 போட்டிகளில் 9230 ரன்களை குவித்துள்ளார். மேலும் 30 சதங்கள் அடித்துள்ள அவர் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

அப்படிப்பட்ட அவர் நல்ல ஃபிட்னஸ் கொண்டிருப்பதால் குறைந்தது இன்னும் 2 வருடங்கள் வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது.

- Advertisement -

2018 போல விருப்பம்:

அதிலும் ஆஸ்திரேலியா தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்காத ரோஹித் சர்மாவை அடுத்த இங்கிலாந்து தொடரில் தேர்வுக்குழு கழற்றி விட முடிவெடுத்ததாக செய்திகள் வந்தன. அடுத்த சில மணி நேரங்களில் ரோஹித் சர்மா மரியாதையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த 5 நாட்களுக்குள் தற்போது விராட் கோலியும் ஓய்வு பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் இரு துருவங்களான அவர்கள் இப்படி திடீரென ஓய்வு பெற பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தான் காரணம் என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனெனில் 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கருத்தில் கொண்டு அவர்கள் புதிய அணியை கட்டமைக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அதை டெல்லி அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் சரந்தீப் சிங் உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

திடீர் ஓய்வு:

அதாவது கடந்த ஆஸ்திரேலிய தொடரில் தொடர்ச்சியாக அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்தில் விக்கெட்டை இழந்த விராட் கோலி சமீபத்தில் ரஞ்சிக் கோப்பையில் 12 வருடங்கள் கழித்து விளையாடினார். அப்போது 2014இல் சொதப்பிய இங்கிலாந்தில் 2018ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்ததைப் போல இம்முறையும் 4 – 5 சதங்கள் அடிப்பேன் என்று விராட் கோலி சொன்னதாக சரந்தீப் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 5 நாட்களில் ரோஹித், கோலி அடுத்தடுத்து ரிட்டையராக காரணமே கெளதம் கம்பீர் தான்.. வெளியான ரிப்போர்ட்

தற்போது திடீரென விராட் கோலி விடை பெற யாராவது அழுத்தம் கொடுத்திருப்பார்கள் என்று அவர் சந்தேகித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சில வாரங்களுக்கு முன்பாக ரஞ்சி கோப்பையில் விளையாட வந்த விராட் கோலியிடம் இங்கிலாந்து தொடருக்காக கவுன்டி தொடரில் விளையாட உள்ளீர்களா? என்று கேட்டேன். அதற்கு இங்கிலாந்தில் இந்தியா ஏ அணிக்காக 2 பயிற்சிப் போட்டிகளில் விளையாடி பின்னர் இங்கிலாந்து தொடரில் 2018 போல 4 – 5 சதங்களை அடிக்க விரும்புவதாக விராட் கோலி என்னிடம் சொன்னார். அப்படிப்பட்ட நிலையில் விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது” என்று கூறினார்.

- Advertisement -