5 நாட்களில் ரோஹித், கோலி அடுத்தடுத்து ரிட்டையராக காரணமே கெளதம் கம்பீர் தான்.. வெளியான ரிப்போர்ட்

Gautam Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விடை பெறுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் ரோஹித் சர்மாவும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அந்த சூழ்நிலையில் விராட் கோலியும் ஓய்வு பெற்றுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் சோகத்தையும் கொடுத்துள்ளது.

ஏற்கனவே 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் இருவருமே சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் மோசமாக பேட்டிங் செய்த அவர்கள் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தனர். அதனால் அவர்களை ஓய்வு பெறுமாறு ஒரு தரப்பு ரசிகர்களை விமர்சனம் செய்தனர் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

அடுத்தடுத்த ஓய்வுகள்:

ஆனால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி செமி ஃபைனலில் அபாரமாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். இறுதிப்போட்டியில் அசத்திய ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்று இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக அவர்கள் இருவரும் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக மாறியது.

இருப்பினும் அவர்கள் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து ஒரே வாரத்திற்குள் ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிய அணியை கட்டமைக்க விரும்புவதாக தெரிய வந்துள்ளது. அதனாலேயே விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை கழற்றி விட தேர்வு குழுவுக்கு அவர் பரிந்துரைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

காரணமான கம்பீர்:

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பிடிஐ இணையத்தில். “கௌதம் கம்பீரின் சகாப்தம் தற்போது துவங்குகிறது. அவர் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வகைப்படுத்தி வேலைகளை துவங்கியுள்ளார் அதற்கு இந்திய அணிக்கு புதிய முகங்கள் தேவைப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சீனியர்களை வைத்துக் கொண்டிருப்பதால் கௌதம் கம்பீர் எங்கே இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்”

இதையும் படிங்க: நான் இப்போ செலக்டரா இருந்திருந்தா கோலிக்கு அந்த பதவியை கொடுத்து விளையாட வச்சிருப்பேன் – சீக்கா பேட்டி

“அதனால் அவரும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரும் ஒரே மாதிரியான முடிவுகளை எடுக்கும் பக்கத்திற்கு வந்துள்ளனர்” எனக் கூறினார். மொத்தத்தில் பேட்டிங் துறையின் துருவங்களாக கருதப்பட்ட விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இல்லாமல் அடுத்த இங்கிலாந்து தொடரில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement