நான் இப்போ செலக்டரா இருந்திருந்தா கோலிக்கு அந்த பதவியை கொடுத்து விளையாட வச்சிருப்பேன் – சீக்கா பேட்டி

Srikkanth and Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று திடீர் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் அவரது இந்த ஓய்வினை மதித்து பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

நான் செலக்டரா இருந்திருந்தா விராட் கோலியை விட்டிருக்க மாட்டேன் : சீக்கா ஸ்ரீகாந்த்

அதேபோன்று விராட் கோலி உடனான நினைவுகள் குறித்தும் பல்வேறு நட்சத்திரங்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் விராட் கோலியின் ஓய்வு முடிவு குறித்தும், தான் தேர்வுக்குழு தலைவராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்பது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி ஒரு ஸ்பெஷல் திறமை உடைய வீரர். அவரிடம் இருக்கும் நேர்மை, ஒழுக்கம் மற்றும் உழைப்பு என அனைத்தையும் பார்த்து தான் நான் அவரை இந்திய அணியில் தேர்வு செய்தேன். முதல் முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது நான் அவரை தேர்வு செய்து அனுப்பியதும் பலரும் என்னுடைய அந்த தேர்வை சந்தேகமாக பார்த்தார்கள்.

ஆனால் இந்திய அணி தடுமாறிய போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அங்கு தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதன்பிறகு இத்தனை ஆண்டுகள் அவர் செய்ததெல்லாம் வரலாறு. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள விராட் கோலி இந்திய அணியின் அடுத்த கட்ட நகர்விற்கும் காரணமாக இருந்திருக்கிறார்.

- Advertisement -

தேர்வுக்குழு தலைவராக மட்டும் நான் தற்போது இருந்திருந்தால் அவரை இவ்வளவு விரைவாக ஓய்வுபெற விட்டிருக்க மாட்டேன். மேலும் விராட் கோலிக்கு மீண்டும் டெஸ்ட் கேப்டன் பதவியை வழங்கி இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்திருப்பேன்.

இதையும் படிங்க : எபிக் கரியர்.. அந்த 2 விடயம் போதும் நீங்க ஒரு ட்ரூ லெஜண்ட்.. விராட் கோலியை பாராட்டி – ஏ.பி.டி நெகிழ்ச்சி

அதோடு இந்திய அணி நீங்கள் கேப்டனாக இருந்தபோது மிகச் சிறப்பான நிலையில் இருந்தது. தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் பழைய மாதிரி டெஸ்ட் அணியை கொண்டு வந்து விட்டு பின்னர் ஓய்வு பெறுங்கள் என்று கூறி தொடர்ந்து விளையாட வைத்திருப்பேன் என ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement