கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரராக திகழும் விராட் கோலி பல ஆண்டு காலம் தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் உடன் இணைந்து ஆர்.சி.பி அணிக்காக விளையாடி உள்ளார். சர்வதேச போட்டிகளை தாண்டி ஐபிஎல் போட்டிகளின் போது அதிகமாக இணைந்து விளையாடிய அவர்கள் நாளடைவில் மிகச்சிறந்த நண்பர்களாகவும் மாறினார்.
விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.பி.டி :
குறிப்பாக ஏ பி டி வில்லியர்ஸ் எந்த ஒரு பேட்டியில் பேசினாலும் விராட் கோலி குறித்து மிகச் சிறப்பான கருத்துக்களையே பகிர்வார். அதோடு தனது கிரிக்கெட் கரியரில் விராட் கோலி ஒரு முக்கிய நபர் என்றும் அவர் தனது மிகச்சிறந்த நண்பர் என்றும் பலமுறை ஏபிடி வில்லியர்ஸ் அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.
அதேபோன்று விராட் கோலியும் இந்தியாவைத் தாண்டி தனக்கு இருக்கும் மிகச்சிறந்த நண்பர் ஏ.பி.டிவில்லியர்ஸ் தான் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி இவர்களுக்குள் நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து ஆர்.சி.பி அணிக்காக பல்வேறு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளனர்.
இந்நிலையில் மே 12-ஆம் தேதியான இன்று சர்வதேச டெஸ்ட் போட்டியிலிருந்து விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்ததும் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் விராட் கோலியின் நெருங்கிய நண்பரான ஏ.பி.டிவில்லியர்சும் அவரின் இந்த ஓய்வுக்கு பின்னர் தனது பாராட்டுகளை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ள ஏ.பி.டி அதில் குறிப்பிட்டதாவது : வாழ்த்துக்கள் விராட் கோலி.. உங்களுடைய டெஸ்ட் கரியர் ஒரு காவியம். உங்களுடைய உறுதியும், திறமையும் எப்போதுமே என்னை உத்வேகப்படுத்தியுள்ளன. நீங்கள் ஒரு உண்மையான லெஜன்ட் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஆர்.சி.பி கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு ஏற்பட்டுள்ள காயம். அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பில்லை – புதிய கேப்டன் யார்?
அவரது இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்தாலும் இந்திய அணிக்காக தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகள் ஒருநாள் போட்டிகளில் விளையாட இருப்பது ரசிகர்களை சற்று நிம்மதியடைய வைத்துள்ளது.



