விராட் கோலி லெஜெண்ட் ஆனா தரமான சகாப்தத்தின் நாயகனான சச்சின் தான் எப்போவும் பெஸ்ட் – முன்னாள் பாக் வீரர் வெளிப்படை

- Advertisement -

இந்தியாவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989ஆம் ஆண்டு தனது 16 வயது பிஞ்சு கால்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற அதிரடியான வேகப்பந்து வீச்சளார்களை கொண்ட பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமாகி நாளடைவில் உலகின் அனைத்து இடங்களிலும் உலகின் அனைத்து தரமான பவுலர்களையும் எதிர்கொண்டு 30000க்கும் மேற்பட்ட ரன்களையும் 100 சதங்களையும் விளாசி 1998 கோகோ கோலா கோப்பை முதல் 2011 உலகக்கோப்பை வரை ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் குதிரை கொம்பாக கருதப்பட்ட இரட்டை சதம் உட்பட சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து பேட்டிங் சாதனைகளையும் படைத்துள்ள அவர் இந்த உலகமே கண்ட மகத்தான வீரர்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார்.

sachin

- Advertisement -

அதனால் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்கள் கொண்டாடும் அவர் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார். அதே போல் கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பை கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி ஆரம்பத்தில் தடுமாறினாலும் கேப்டன் தோனியின் ஆதரவுடன் குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்து விளையாடி வருகிறார்.

சச்சின் தான் பெஸ்ட்:
குறிப்பாக சச்சின் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியில் உலகின் அனைத்து தரமான பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர் 34 வயதிலேயே 25000+ ரன்களையும் 75 சதங்களையும் விளாசி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் நிறைய தருணங்களில் சச்சினின் சாதனைகளை அசால்டாக உடைத்து வரும் 100 சதங்களை மிஞ்சி 110 சதங்கள் அடிப்பாார் என்று சில முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். அப்படி வெவ்வேறு தலைமுறைகளில் உலக கிரிக்கெட்டின் அரசனாக செயல்பட்ட இவர்களில் யார் சிறந்தவர் என்ற விவாதம் இந்திய ரசிகர்களிடையே இருந்து வருவது வழக்கமாகும்.

Virat Kohli

இந்நிலையில் நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி ஜாம்பவானாக செயல்படுகிறார் என்றாலும் வாசிம் அக்ரம், வால்ஷ், மெக்ராத், வார்னே போன்ற வரலாற்றின் மகத்தான பவுலர்களை எதிர்கொண்ட சச்சின் தான் சிறந்தவர் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டப் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் மட்டுமல்லாமல் இந்த உலகமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த பேட்ஸ்மேன் இருப்பாரேயானால் அது சச்சின் டெண்டுல்கரை விட யாரும் பெரிதாக இருக்க முடியாது. நீங்கள் புத்தகத்தில் இருக்கும் ஒரு ஷாட்டுக்கு எடுத்துக்காட்டை பார்க்க விரும்பினால் அதற்கு வல்லுனர்கள் சச்சினை எடுத்துக்காட்டாக சொல்வார்கள்”

- Advertisement -

“விராட் கோலி இந்த தலைமுறையின் லெஜெண்ட் ஆனால் சச்சின் தன்னுடைய காலத்தில் மிகவும் கடினமான பவுலர்களை எதிர்கொண்டார். அந்த காலத்தில் இருந்த அனைத்து பவுலர்களும் மிகவும் வித்தியாசமானவர்கள். விராட் கோலி வாசிம் அக்ரமை கொண்டாரா? அவர் வால்ஷ், மெக்ராத், ஷேன் வார்னே, முரளிதரன் போன்றவர்களை எதிர்கொண்டாரா? ஏனெனில் அவர்களெல்லாம் பெரிய பெயரைக் கொண்டவர்கள் என்பதுடன் சாதூரியமான பவுலர்கள். அவர்களுக்கு உங்களை வலையில் எப்படி விழ வைக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் இந்த காலத்தில் 2 வகையான பவுலர்கள் மட்டுமே உள்ளனர். ஒன்று உங்களை ரன்கள் அடிக்க விடாமல் நிறுத்துவார்கள். மற்றொன்று உங்களை வலையில் சிக்க வைத்து அவுட்டாக்குவார்கள்”

Saqlain Mushtaq

“ஆனால் அந்த காலத்து பவுலர்கள் அந்த இரண்டையும் செய்யக்கூடியவர்கள். குறிப்பாக பேட்ஸ்மேன்களை எப்படி அவுட்டாக்க வேண்டும் என்பதை தெரிந்தவர்கள்” என்று கூறினார். இருப்பினும் விராட் கோலியும் டேல் ஸ்டைன், ட்ரெண்ட் போல்ட், பட் கமின்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற நவீன கிரிக்கெட்டின் தரமான பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட பெருமைக்குரியவர். ஆனால் இப்போது பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் பல விதிமுறைகள் சச்சின் காலத்தில் பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது.

இதையும் படிங்க:IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது போட்டியை காண நேரில் வந்த ரஜினிகாந்த – அவருக்கு கிடைத்த மரியாதை

அத்துடன் இப்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற ஒரு சில அணிகளை தவிர்த்து இதர அணிகளில் தரமான பவுலர்களுக்கு பஞ்சம் காணப்படுகிறது. ஆனால் சச்சின் காலத்தில் ஜிம்பாப்வே அணியில் கூட 3 தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அந்த வகையில் விராட் கோலி லெஜெண்ட் என்றாலும் சச்சின் தரமான சகாப்தத்தின் ஜாம்பவான் என்றே சொல்லலாம்.

Advertisement