IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது போட்டியை காண நேரில் வந்த ரஜினிகாந்த – அவருக்கு கிடைத்த மரியாதை

Rajini
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்றும் மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 17-ஆம் தேதி துவங்கியது.

IND-vs-AUS

அதன்படி இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த வேளையில் ஆஸ்திரேலிய அணியானது முதலில் விளையாடி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சார்பாக துவக்க வீரரான மிட்சல் மார்ஷ் 81 ரன்களை குவித்தார். அவரை தவிர்த்து வேறயெந்த வீரரும் பெரிய அளவில் ரன்களை குவிக்காததால் இந்திய அணிக்கு 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Rajini 1

இந்நிலையில் இந்த போட்டியை காண தென்னிந்திய சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நேரில் வந்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த முதலாவது ஒருநாள் போட்டியை மைதானத்தில் நேரில் காண வந்த ரஜினிகாந்த்தை மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் நேரில் அழைத்ததாகவும் அவரை சிறப்பு பெவிலியனில் அமர வைத்து போட்டியை காண வைத்ததாகவும் தெரிகிறது.

- Advertisement -

இது குறித்த சில புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அண்மையில் இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் ரஜினிகாந்தை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்த சில புகைப்படங்கள் வெளியான வேளையில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியை அவர் நேரில் கண்டுகளிக்க வந்தது குறித்த சில புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரிஷப் பண்டை நேரில் சந்தித்த பிறகு யுவ்ராஜ் சிங் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு – விவரம் இதோ

மேலும் இந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டியை நேரில் காண மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியம் தான் அவரை சிறப்பு விருந்தினராகவும் அழைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement