
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நேற்று புனே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 166 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாசாளர் சாகிப் மஹ்முத் எந்த ஒரு பவுலரும் இந்திய அணிக்கு எதிராக படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய அவர் முதல் பந்தில் சஞ்சு சாம்சனையும், இரண்டாவது பந்தில் திலக் வர்மாவையும், கடைசி பந்தில் சூரியகுமார் யாதவையும் வீழ்த்தினார்.
எப்படி ஒரே ஓவரில் மூன்று இந்திய வீரர்களை எந்த ஒரு பவுலரும் வீழ்த்தியது கிடையாது. அதேபோன்று அந்த ஓவரை அவர் மெய்டன் ஓவராகவும் வீசியுள்ளார். இப்படி ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டை எடுத்து மெய்டன் ஓவராக வீசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவை குறை சொல்லல.. இங்கிலாந்தும் அதையே செஞ்சுருக்கும்.. ஆனா இது சரியில்ல.. மைக்கேல் வாகன்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரின் கடைசி ஐந்தாவது டி20 போட்டியானது நாளை ஜனவரி 2-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.