புனே நகரில் நேற்று நடைபெற்ற 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 3 – 1* (5) என்ற கணக்கில் கடைசிப் போட்டிக்கு முன்பாகவே இந்தத் தொடரை இந்தியா வென்றுள்ளது. இருப்பினும் அந்தப் போட்டியில் துபேவுக்கு பதிலாக இந்திய அணி ஹர்ஷித் ராணாவை சப்ஸ்டிடியூட் வீரராக பயன்படுத்தியது சர்ச்சையை உண்டாக்கியது.
ஏனெனில் அந்தப் போட்டியில் கடைசி ஓவர் எதிர்கொண்ட துபேவின் தலையில் பவுன்சர் பந்து பட்டது. அதை சோதித்த இந்திய அணியின் மருத்துவர் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்ததால் தொடர்ந்து விளையாடிய துபே கடைசி பந்தை எதிர்கொண்டு ரன் அவுட்டானார். அடுத்ததாக இங்கிலாந்து ஆட்டத்தை துவங்கிய போது சப்ஸ்டிடியூட் விதிமுறையைப் பயன்படுத்திய இந்தியா துபேவுக்கு பதிலாக ராணாவை களமிறக்கியது.
மைக்கேல் வாகன் பல்டி:
அந்த வாய்ப்பில் முக்கியமான 3 விக்கெட்டுகள் எடுத்த ராணா இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். ஆனால் ஐசிசி விதிமுறைப்படி பேட்ஸ்மேன் காயமடைந்தால் பேட்ஸ்மேன், பவுலர் விலகினால் பவுலரை தான் மாற்று வீரராக பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் ஆல் ரவுண்டரான துபேவுக்கு பதில் பவுலரான ராணாவை இந்தியா பயன்படுத்தியது விதிமுறை மீறிய செயல் என்று மைக்கேல் வாகன், அலெஸ்டர் குக் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.
சொல்லப்போனால் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் அது பற்றி போட்டியின் முடிவில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அந்த சூழ்நிலையில் ஒருவேளை இங்கிலாந்து அணியும் இந்தியா எடுத்த அதே முடிவை எடுத்திருக்கும் என்று மைக்கேல் வாகன் தற்போது தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
ரசிகர்கள் பதிலடி:
“சிவம் துபேவுக்கு பதிலாக ராணாவை எவ்வாறு சரியான மாற்று வீரர் என்று அவர்கள் கண்டறிந்தார்கள்? என நான் தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் ஒரு பவுலர் எப்படி பகுதி நேரமாக பவுலிங் செய்யும் பேட்ஸ்மேனுக்கு பதிலாக விளையாட முடியும். அது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அதே சமயம் இங்கிலாந்துக்கு அது போன்ற வாய்ப்பு கிடைத்திருந்தால் அவர்களும் அதையே செய்திருப்பார்கள்”
இதையும் படிங்க: தோல்விக்கு சாக்கு சொல்லல.. ஆனா இந்தியா செஞ்சது நியாயமா? அவர்கிட்ட கேள்வி கேட்பேன்.. ஜோஸ் பட்லர்
“இருப்பினும் துபேவுக்கு பதிலான சரியான மாற்று வீரர் ராணா என்று உங்களால் என்னிடம் சொல்ல முடியாது” எனக் கூறினார். மறுபுறம் 2019 உலகக் கோப்பையில் பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பந்து சென்ற போது இங்கிலாந்து எக்ஸ்ட்ரா ரன்னை வாங்கிக் கொண்டது. மேலும் பவுண்டரிகள் அடிப்படையில் தோற்காத நியூசிலாந்தை வீழ்த்தியதாக சொல்லி இங்கிலாந்து கோப்பையை வென்றது. அதை விட இது மோசமில்லை என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.



