3-4 வருஷமாவே அந்த பையன் பத்தி தான் என்கிட்ட அதிகமா கேள்வி கேக்குறாங்க. வெற்றிக்கு பின்னர் – சஞ்சு சாம்சன் பேட்டி

Sanju
- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒன்பதாவது போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை தோற்கடித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் ரியான் பராக் மற்றும் அஸ்வின் ஆகியோர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதன் பின்னர் ஜுரேல் மற்றும் ஹெட்மயர் ஆகியோரும் அதிரடி காட்ட ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை மட்டுமே குவிக்க 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சஞ்சு சாம்சன் கூறுகையில் : இந்த போட்டி ஒரு ரோலர் கோஸ்டர் போட்டியாக அமைந்தது. முதல் 10 ஓவர்களில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. அப்போது ரோவ்மன் பவலை பேட்டிங் செய்ய தயாராக இருக்க சொன்னோம்.

- Advertisement -

ஆனால் அதற்கு முன்னதாக நமது அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தற்போதயெல்லாம் 11 பேர் கொண்ட அணி குறித்து யோசிக்காமல் 15 பேர் கொண்ட அணியை வைத்து யோசிக்க வேண்டியுள்ளது. இருப்பினும் பராக் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை மாற்றிவிட்டார். அதேபோன்று பந்துவீச்சாளர்களும் சரியான சமயத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.

இதையும் படிங்க : 3 – 4 வருஷத்துக்கு அப்றம் அம்மாவை பெருமைப்பட வெச்சுட்டேன்.. ஃபார்முக்கு வர அதான் ஹெல்ப் பண்ணுச்சு.. ரியன் பராக்

கடந்த மூன்று – நான்கு ஆண்டுகளாகவே நான் எங்கு சென்றாலும் பராக் பற்றியே அதிகமாக கேட்கிறார்கள். அவர் எப்போது நன்றாக விளையாடுவார்? என்ற கேள்வியும் இருந்து வந்தது. அதற்கு பதில் இந்த சீசன்தான். நிச்சயம் அவர் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இந்திய அணிக்காகவும் நிறைய சிறப்பான செயல்பாட்டை அவர் வெளிப்படுத்த காத்திருக்கிறார் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement