தோற்றாலும் இந்த விடயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் – ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் உருக்கம்

Samson
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது நேற்று கோலாகலமாக நிறைவு பெற்றது. இந்த இறுதிப் போட்டியில் விளையாடிய குஜராத் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. ஒருபுறம் இது குஜராத் அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த வேளையில் மறுபுறம் 14 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு சென்ற ராஜஸ்தான் கோப்பையை தவறவிட்டது ராஜஸ்தான் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

GTvsRR

- Advertisement -

இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக திகழ்ந்ததால் நேற்றைய போட்டி மிகவும் பரபரப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டியில் எந்த ஒரு கட்டத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தலைதூக்க விடாமல் குஜராத் தனி அவர்களை எளிதில் வீழ்த்தியது. கிட்டத்தட்ட இந்த போட்டி ஒருதலை போட்டியாகவே அமைந்தது.

லீக் சுற்று போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத் அணியானது முதலாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அதனைத்தொடர்ந்து இறுதிப் போட்டியிலும் அவர்களை எளிதாக வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த தோல்வி குறித்து பேசுகையில் கூறியதாவது :

GT vs RR Shubman Gill

“இந்த சீசன் எங்களுக்கு உண்மையாகவே ஸ்பெஷலான சீசனாக இருந்தது. கடந்த இரண்டு மூன்று சீசன்களில் எங்கள் அணி ரசிகர்கள் மற்றும் அனைவரும் கடினமான நேரங்களை சந்தித்தோம். ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை கொடுப்பது சிறந்தது. எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

- Advertisement -

திறமையான இளம் வீரர்கள், திறமையான சீனியர் வீரர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த நாள் எங்களுக்கு சரியாக அமையவில்லை. எனினும் என் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் மெகா ஏலத்தில் காலத்தில் தரமான பந்துவீச்சாளர்களை எடுக்க விரும்பினோம். ஏனெனில் அவர்கள்தான் போட்டியை வென்று கொடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை வாங்காமலேயே அதிக போட்டிகளில் விளையாடிய – டாப் 5 தரமான வீரர்கள்

மேலும் குஜராத் அணி குறித்து பேசிய அவர் கூறுகையில் : குஜராத் அணிக்கு என்னுடைய மிகப்பெரிய வாழ்த்துக்கள். அவர்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல தகுதியானவர்கள்” என கூறினார்.

Advertisement