ஐபிஎல் வரலாற்றில் கோப்பையை வாங்காமலேயே அதிக போட்டிகளில் விளையாடிய – டாப் 5 தரமான வீரர்கள்

ABD
- Advertisement -

ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல நட்சத்திர வீரர்கள் கௌரவமாகக் கருதுகின்றனர். ஏனெனில் ஐசிசி நடத்தும் உலக கோப்பைக்கு நிகரான தரத்தை பெற்றுள்ள இந்த தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடும் தரமான வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி தங்களது அணி கோப்பையை வென்றால் தாங்களும் கோப்பையை முத்தமிடலாம் என்ற எண்ணத்தில் போராடுவார்கள். அதில் முக்கால்வாசி வீரர்கள் ஏதேனும் ஒரு அணியில் விளையாடும் போது குறைந்தது ஒரு முறையாவது ஐபிஎல் கோப்பையை தொட்டு கையிலேந்தி விடுவார்கள்.

Dravid

- Advertisement -

ஆனால் ஒருசில தங்கத்திலும் தரமான வீரர்கள் தங்களது முழு மூச்சை கொடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டாலும் கூட ஐபிஎல் கோப்பையை தொடக் கூடிய பாக்கியத்தை பெற மாட்டார்கள். இத்தனைக்கும் தங்களது அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதற்காக மொத்த திறமையையும் களத்தில் வெளிப்படுத்தி வெற்றிக்காக போராடினாலும் கூட அவர்களது அணி தோல்வி அடைவதால் அவர்களாலும் கோப்பையை தொட முடியாத பரிதாப நிலை ஏற்படுகிறது.

அது போன்ற தரமான வீரர்கள் தங்களின் கோப்பையை கையில் தொட்டு முத்தமிடுவதற்கு அவர் முழு தகுதியானவர்கள், ஆனாலும் முடியவில்லையே என்று ரசிகர்களே கூறும் அளவுக்கு பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இருப்பினும் அந்த தரமான வீரர்களின் கைகளை சென்றடைய ஐபிஎல் கோப்பை பாக்கியம் செய்யவில்லை என்று கூறும் அளவுக்கு ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடி கோப்பையை வெல்ல முடியாத டாப் 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

5. கிறிஸ் கெயில் 142: ஐபிஎல் இன்று இந்த அளவு பிரபலம் அடைவதற்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் பலமுறை இந்த தொடரில் விஸ்வரூபம் எடுத்து சூறாவளியை போன்று சுழன்றடித்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் மழையாக பொழிந்து ரசிகர்களை கவர்ந்தது ஒரு காரணமாகும். கடந்த 2008 முதல் கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப் போன்ற அணிகளுக்காக முரட்டுத்தனமாக பேட்டிங் செய்து அதிக சதங்கள், அதிக சிக்ஸர்கள், அதிகபட்ச ஸ்கோர், அதிவேக சதம் என எண்ணற்ற சாதனைகளை படைத்த அவர் நிச்சயம் கோப்பையை வெல்ல தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

குறிப்பாக பெங்களூரு அணிக்காக அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 2011, 2016 ஆகிய சீசன்களில் இறுதிப் போட்டி வரை சென்ற போதிலும் கோப்பையை தொட முடியவில்லை. அதிலும் 2016 பைனலில் 76 (38) அடித்த போதிலும் விராட் கோலி தவிர இதர பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் கோப்பையை வெல்ல முடியாத அவர் 142 போட்டிகளை கடந்து இந்த வருடம் ஓய்வு பெற்றதால் கடைசி வரை சாம்பியன் பட்டத்தை வாங்காத சாம்பியனாக விடை பெற்றுள்ளார்.

mishra

4. அமித் மிஸ்ரா 154: ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர், அதிக முறை ஹாட்ரிக் எடுத்த பவுலர் போன்ற சரித்திரங்களுக்கு சொந்தக்காரரான முன்னாள் இந்திய சுழல் பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா டெல்லி, டெக்கான், ஹைதெராபாத் போன்ற அணிக்காக 2021 வரை விளையாடி 154 விக்கெட்டுகள் எடுத்த ஒரு சாம்பியன் பவுலர் ஆவார்.

- Advertisement -

ஆனால் இவரும் 154 போட்டிகளில் விளையாடிய போதிலும் கடைசி வரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை தொட்டுப் பார்க்காமல் கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்று விட்டார்.

rahane2

3. அஜிங்கிய ரகானே 158: தற்போது மூத்த வீரராக இருக்கும் அஜிங்கிய ரஹானே 2008 – 2010 வரை சச்சின் தலைமையில் மும்பையில் விளையாடிய போது அந்த அணி கோப்பையை வெல்லவில்லை.

- Advertisement -

அதன்பின் ராஜஸ்தான், புனே, டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற அணிகளில் அவர் விளையாடிய காலகட்டங்களில் அந்த அணிகளும் கோப்பையை வாங்கவில்லை என்ற வகையில் 158 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்தப் பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

ABD

2. ஏபி டிவில்லியர்ஸ் 184: தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவரின் கைகளை தொடுவதற்கு ஐபிஎல் கோப்பைக்கு தான் அதிர்ஷ்டம் இல்லை என்றே கூறவேண்டும். ஏனெனில் உலகின் எப்பேர்பட்ட தரமான பவுலர் எவ்வளவு கடினமாக பந்து வீசினாலும் லாவகமாக மைதானத்தின் நாலா புறங்களிலும் சிக்ஸர் அடிக்கும் திறமை பெற்ற அவர் டி20 கிரிக்கெட்டுக்கு நிறைய வித்தியாசமான புதுப்புது ஷாட்களை அறிமுகப்படுத்தி புதிய பரிணாமத்தை காண்பித்தவர்.

அதன் காரணமாகவே அவரை மிஸ்டர் 360 பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். 2008 – 2010 வரை டெல்லிக்காக விளையாடி அவர் அதன்பின் 2021 வரை மொத்தம் 184 போட்டிகளில் பெங்களூருவுக்காக விளையாடிய போதிலும் கோப்பையை வாங்க முடியாமல் 2-வது இடம் பிடிக்கிறார். குறிப்பாக 2011, 2016 ஆகிய வருடங்களில் கோப்பையை நெருங்கிய அவர் கடைசிவரை தொட முடியாமலே ஓய்வு பெற்று விட்டார்.

Kohli-2

1. விராட் கோலி 223: டெல்லியை சேர்ந்த விராட் கோலி இந்தியாவிற்காக நட்சத்திர வீரராவதற்கு முன்பாகவே தனது பயணத்தை 2008இல் பெங்களூரு அணியில் தொடங்கி இன்றுவரை ஒரே அணியில் விளையாடி வரும் வீரராக சாதனை படைத்துள்ளார். இளம் வீரராக தொடங்கி அவர் உலகத்தரம் வாய்ந்த வீரராக மாறியபின் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து ரன் மெஷினாக மாறி ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக வெற்றிக்கு போராடிய போதிலும் அந்த அணியாலும் அவராலும் கோப்பையை வாங்க முடியவில்லை.

அதிலும் 2013 – 2021 வரை கேப்டனாக செயல்பட்டு குறிப்பாக 2016 சீசனில் விஸ்வரூபம் எடுத்து 4 சதங்கள் உட்பட 973 ரன்கள் குவித்த போதிலும் பைனலில் கெயில் உடன் இணைந்து 54 (35) ரன்கள் அடித்து கோப்பையை நெருங்கிய அவர் இதர பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 8 ரன்கள் வித்தியாசத்தில் முத்தமிட முடியாமல் போனார். தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர் வாழ்நாளில் ஒரே அணிக்காக 223 போட்டிகளில் விளையாடியிருந்தாலும் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறார். ஐபிஎல் எனும் கோப்பையை வெல்வதற்கு ஒரு தரமான தகுதியான வீரர் என்றால் அது விராட் கோலி என்பதில் சந்தேகமில்லை.

Advertisement