
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனின் பேட்டிங் பார்ம் இது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்த வேளையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த கடைசி போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்து தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அணியிலும் அவர் இடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது இந்த நான்கு போட்டிகள் கொண்ட தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் முதல் போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் டக் அவுட்டாகி இருந்தார்.
அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியில் இடம்பிடித்திருந்த அவர் இந்த கடைசி போட்டியில் 56 பந்துகளில் 109 ரன்கள் குவித்து இந்த தொடரில் தனது இரண்டாவது சாதனையை பூர்த்தி செய்து ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி இருந்தார். இந்நிலையில் இந்த தொடரில் இரண்டு அடுத்த அடுத்த போட்டிகளில் டக் அவுட்டான பின்னர் கடைசி போட்டியில் அடித்த சதம் குறித்து பேசியிருந்த அவர் கூறுகையில் :
என் வாழ்க்கையில் ஏராளமான வெற்றி தோல்விகளை நான் சந்தித்துள்ளேன். கடைசியாக இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் டக் அவுட்டான பின்னர் என் மனதில் ஏகப்பட்ட சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து நான் கடினமான உழைத்தற்காக இந்த சதம் கிடைத்துள்ளதாக நினைக்கிறேன்.
இந்த இன்னிங்சில் அபிஷேக் ஷர்மா துவக்க ஓவர்களிலேயே அதிரடியாக விளையாடியதால் என் மீது இருந்த அழுத்தத்தை குறைத்துவிட்டார். அதேபோல் திலக் வர்மாவும் சிறப்பாக பேட்டிங் செய்ததால் பிரஷர் எனக்கு வரவில்லை. அவருடன் சேர்ந்து ஏராளமான முறை பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறேன். இந்திய அணியின் எதிர்கால வீரரான அவருடன் இணைந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த சதம் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.
இதையும் படிங்க : விராட் கோலியின் சாதனையை தூளாக்கிய திலக் வர்மா.. 22 வயதிலேயே தனித்துவமான சாதனை
ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரில் முதல் சதம் விளாசிய போது நிறைய பேசிவிட்டேன். அதனால் இந்த கடைசி போட்டியில் என்னுடைய டெக்னிக்கை சிம்பிளாக வைத்து பெரிய ரன் அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதேபோன்று இந்திய அணிக்காகவும் பெரிய ரன்களை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தாலே இந்த போட்டியில் சதம் அடிக்க முடிந்தது என சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.