IPL 2023 : ரஹானேவின் ஆல் டைம் சாதனையை உடைத்து ராஜஸ்தானின் ராயலாக – சஞ்சு சாம்சன் வரலாற்று சாதனை

Sanju Samson anjinkya Rahane
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 5ஆம் தேதியன்று நடைபெற்ற 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ் இந்த வருடத்தில் 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. கௌகாத்தி நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 197/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 86* (56) ரன்களும் பிரப்சிமரன் சிங் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 60 (34) ரன்களும் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 193 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் 11 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் தொடக்க வீரராக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் டக் அவுட்டாகி சென்றார். அதனால் 26/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லரும் அதிரடியாக விளையாட முயற்சித்து 19(11) ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். ஆனால் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு வெற்றிக்கு போராடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 42 (25) ரன்கள் குவித்து அசத்திய போதும் முக்கிய நேரத்தில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

ராஜஸ்தானின் ராயல்:
அந்த நிலையில் அதிரடியாக விளையாடிக் காப்பாற்ற முயற்சித்த ரியான் பராக் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 20 (12) ரன்களில் அவுட்டாகி செல்ல மறுபுறம் தடவலாக செயல்பட்ட தேவதூத் படிக்கள் 21 (26) ரன்கள் எடுத்து தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தார். ஏனெனில் அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் கடைசி நேரத்தில் சிம்ரோன் ஹெட்மையர் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 36 (18) ரன்களும் துருவ் ஜுரேல் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 32* (15) ரன்கள் எடுத்து போராடியும் 20 ஓவர்களில் 192/7 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் போராடி தோற்றது.

பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்கள் எடுத்த நாதன் எலிஸ் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். முன்னதாக இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓப்பனிங் இடத்தில் களமிறங்கியது தோல்விக்கு காரணமானதாக நிறைய விமர்சனங்கள் காணப்படும் நிலையில் கேட்ச் பிடிக்கும் போது பட்லருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக போட்டியின் முடிவில் கேப்டன் சஞ்சு சாம்சன் தெளிவுபடுத்தினார். மேலும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்ததால் பொறுப்புடன் செயல்பட்ட அவர் அதிரடியாக 42 ரன்கள் எடுத்து முடிந்தளவுக்கு வெற்றிக்கு போராடி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

முதல் போட்டியிலும் அரை சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் இந்த போட்டியில் எடுத்த 42 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற அஜிங்க்ய ரகானேவின் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சஞ்சு சாம்சன் : 3138* ரன்கள் (118 போட்டிகள்)
2. அஜிங்க்ய ரகானே : 3098 ரன்கள் (106 போட்டிகள்)
3. ஷேன் வாட்சன் : 2474 ரன்கள் (84 போட்டிகள்)
4. ஜோஸ் பட்லர் : 2378* ரன்கள் (60 போட்டிகள்)
5. ராகுல் டிராவிட் : 1324 ரன்கள் (52 போட்டிகள்)

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் தன்னுடைய பயணத்தை துவங்கிய சஞ்சு சாம்சன் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவுக்காகவும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால் அதன் பின் 2016 – 2017 வரை டெல்லி அணியில் விளையாடிய அவர் இந்தியாவுக்காக 2019 வரை 2வது போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெறாமல் தவித்தார்.

இதையும் படிங்க:RR vs PBKS : அஷ்வினை துவக்க வீரராக களமிறக்கியதற்கு இதுதான் காரணம் – சஞ்சு சாம்சன் அளித்த பதில் இதோ

இருப்பினும் 2018 முதல் மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் இந்தியாவுக்காக விளையாட தொடர்ந்து போராடி வருகிறார். குறிப்பாக கடந்த வருடம் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அவர் 2008இல் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் ராஜஸ்தானை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற சாதனையும் படைத்தார். தற்போது அதிக ரன்கள் குவித்துள்ள அவர் ராஜஸ்தானின் ராயலாக ஆல் டைம் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement