RR vs PBKS : அஷ்வினை துவக்க வீரராக களமிறக்கியதற்கு இதுதான் காரணம் – சஞ்சு சாம்சன் அளித்த பதில் இதோ

Samson-and-Ashwin
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் போட்டியானது நேற்று கவுகாத்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷிகார் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

Ashwin

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்து அசத்தியது. பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணியின் துவக்க வீரராக பட்லர் களமிறங்காமல் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் துவக்க வீரராக களம் இறங்கியது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.

Buttler

ஏனெனில் என்னதான் அஸ்வின் பேட்டிங்கில் கை கொடுக்கக் கூடியவர் என்றாலும் பின் வரிசையில் தான் களமிறங்குவார். ஆனால் நேற்றைய போட்டியில் அவர் துவக்க வீரராக ஏன் இறக்கப்பட்டார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் இந்த கேள்விக்கு போட்டி முடிந்து தெளிவான விளக்கத்தை அளித்த சஞ்சு சாம்சன் கூறுகையில் :

- Advertisement -

பட்லர் பீல்டிங் செய்யும்போது கையில் காயம் அடைந்தார். அதன் காரணமாக அவருக்கு தையல்கள் போட நேரம் ஆகும் என்பதனால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்கிற காரணத்தினாலேயே அஸ்வினை நாங்கள் துவக்க வீரராக அனுப்பினோம். அதற்குள் ஜாஸ் பட்லரும் தனது சிகிச்சை முடித்துக் கொண்டார்.

இதையும் படிங்க : CSK : அந்த பையன் மேல தோனி செம கோபத்தில் இருக்காரு. உண்மையை வெளிப்படுத்திய – சுனில் கவாஸ்கர்

பின்னர் அஸ்வின் ஆட்டம் இழந்ததும் மூன்றாவது வீரராக பட்லர் களம் புகுந்தார் என சஞ்சு சாம்சன் போட்டி முடிந்து தெளிவான விளக்கத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று காயமடைந்த ஜாஸ் பட்லரும் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement