CSK : அந்த பையன் மேல தோனி செம கோபத்தில் இருக்காரு. உண்மையை வெளிப்படுத்திய – சுனில் கவாஸ்கர்

Sunil-Gavaskar
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் நான்கு முறை கோப்பையை வென்ற சென்னை சி.எஸ்.கே அணியானது இம்முறை தோனிக்கு கடைசி சீசன் என்பதனால் கோப்பையை வெல்ல தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதலாவது போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று தங்களது வெற்றி கணக்கை துவங்கியுள்ளது.

Kyle-Mayers

- Advertisement -

இந்நிலையில் இரண்டாவதாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இருந்தாலும் நமது அணியின் பந்துவீச்சின் மீது தோனி கடும் கோபத்தில் உள்ளார். ஏனெனில் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே சிறப்பாக செயல்பட்ட வேளையில் வேகப்பந்து வீச்சாளர்கள் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.

அதிலும் குறிப்பாக இதுவரை நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 16 வொயிடு மற்றும் 5 நோபால்களை வீசி சொதப்பியுள்ளார்கள். அதோடு முதல் போட்டியில் செய்த தவறுகளை விட இரண்டாவது போட்டியில் அதிக தவறுகளை செய்திருந்தனர். எனவே இரண்டாவது போட்டியின் முடிந்த பிறகு பேசிய கேப்டன் தோனி : பந்துவீச்சாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததோடு இனியும் இதேபோன்ற தவறு நடந்தால் வேறு புதிய கேப்டன் கீழ்தான் நீங்க விளையாட வேண்டும் என்ற அதிர்ப்தியையும் தெரிவித்து இருந்தார்.

Hangarekar

இந்நிலையில் தோனி இப்படி பேசியதற்கு பின்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிஷப் ஆகியோர் தோனியிடம் சென்று பேசி இருக்கிறார்கள். அப்போது தோனி கூறிய சில கருத்துக்களை சுனில் கவாஸ்கர் தற்போது வெளிப்படுத்தி உள்ளார். அதன்படி சுனில் கவாஸ்கர் கூறியதாவது :

- Advertisement -

அந்த போட்டி முடிந்ததும் நான் தோனியிடம் சென்று நேரில் பேசினேன். அப்போது சிஎஸ்கே வீரர்கள் மீது அவர் அதிர்ப்தியில் இருந்ததை உணர்த்தேன். அதிலும் குறிப்பாக ராஜ்வர்தன் ஹங்கரேக்கர் மீது தோனி கடும் கோபத்தில் இருந்தார். ஏனெனில் ராஜ்வர்தன் மிகச் சிறப்பாக பந்துவீசக் கூடியவர் என்பதை புரிந்து கொண்டு அவருக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் தோனி அவர் அடிக்கடி நோபால் வீசுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் தன்னிடம் தெரிவித்ததாக கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கேன்சரால அவர் பட்ட கஷ்டம் என்னென்ன தெரியுமா? அது தெரியாம கிண்டல் பண்ணிட்டேன் – ஹர்பஜன் சிங் உருக்கம்

இப்படி இளம் வீரரான ராஜ்வர்தன் ஹங்கரேக்கர் மீது தோனி கோபத்தில் இருந்தாலும் கட்டாயம் அவரை அடுத்தடுத்து போட்டிகளில் மிகச் சிறப்பாக வழி நடத்துவார் என்றும் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement