கேன்சரால அவர் பட்ட கஷ்டம் என்னென்ன தெரியுமா? அது தெரியாம கிண்டல் பண்ணிட்டேன் – ஹர்பஜன் சிங் உருக்கம்

Harbhajan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரான யுவராஜ் சிங் 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2011-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றுவதற்கான முக்கிய வீரராக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் அந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் தொடர் நாயகன் விருதினை வென்றிருந்த யுவராஜ் சிங் கோப்பையை கையில் ஏந்துவதற்காக தனது முழு பங்களிப்பையும் வழங்கி இருந்தார் என்பது நாம் அறிந்ததே.

YuvrajSingh

- Advertisement -

அதேபோன்று மிடில் ஆர்டரில் அவர் விட்டுச் சென்ற இடத்தை இன்னும் இந்திய அணி நிரப்பாமல் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் யுவராஜ் சிங் போன்ற ஒரு வீரர் இந்திய அணியில் இருந்திருந்தால் 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்திருக்காது. அப்படி சிறப்பு மிக்க வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங் பிறந்த 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது கேன்சர் உடன் போராடி களத்தில் விளையாடியது குறித்து உருக்கமான சில தகவல்களை இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : யுவராஜ் சிங்கின் உடல்நிலை அப்பொழுது சரியில்லாமல் இருந்தது. அவருடைய முகம் எப்போதுமே கவலையுடன் சோகமாகவே இருக்கும். பேட்டிங் செய்யும்போது கூட களத்தில் அவருக்கு அதிகமாக இரும்பல் ஏற்படும். அதுமட்டும் இன்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் மைதானத்தில் ரத்த வாந்தியும் எடுத்தார். நான் அவரிடம் ஏன் இவ்வளவு இருமல் வருகிறது? உன்னுடைய வயதுக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்றெல்லாம் திட்டி இருக்கிறேன்.

YuvrajSingh

ஆனால் யுவராஜ் சிங்கோ புற்று நோயோடு போராடி உலக கோப்பை தொடரில் விளையாடினார் அது தெரியாமல் நான் கேலியும் செய்திருக்கிறேன். உண்மையான சாம்பியனான அவர் இல்லையெனில் நிச்சயம் இந்திய அணிக்கு உலகக் கோப்பை கடினமாகத் தான் இருந்திருக்கும். ஒருமுறை அல்ல இருமுறை நாம் உலகக் கோப்பையை வெல்ல யுவராஜ் சிங் கை கொடுத்துள்ளார். அவர் போன்ற வீரர்கள் தனித்துவமானவர்கள் என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நமது அணியின் மருத்துவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக சரியாக தூக்கம் வரவில்லை என்பதனால் அவருக்கு தூக்க மாத்திரை வழங்க சென்றுள்ளார். ஆனால் யுவராஜ் சிங்கம் அவரிடம் : அந்த கடவுள் என்னிடம் இருந்து என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும், உயிர் கூட போகட்டும்.

இதையும் படிங்க : IPL 2023 : கவாஸ்கர், சச்சின் இருந்தாலும் இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு தான் கோல்டன் ஹிஸ்டரி இருக்கு – ரசித் லதீப் ஓப்பனாக பாராட்டு

வலியை கொடுக்கட்டும், ஆனால் எங்களுக்கு உலகக் கோப்பை கொடுங்கள் என்று அவரிடம் கூறியுள்ளார். அதேபோன்று நான் இறுதிப் போட்டியில் விளையாடிய பின்னர் என்ன நடந்தாலும் நடக்கட்டும். அப்போது என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அதுவரை எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதாகவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement