IPL 2023 : கவாஸ்கர், சச்சின் இருந்தாலும் இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு தான் கோல்டன் ஹிஸ்டரி இருக்கு – ரசித் லதீப் ஓப்பனாக பாராட்டு

latif
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை களமிறங்கிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வியை பதிவு செய்து 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த எம்எஸ் தோனி சென்னை அணிக்காகவும் 2018 முதல் மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2வது வெற்றிகரமான அணியாக ஜொலிக்க முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.

அதனால் தல என்ற செல்லப் பெயருடன் தம்மை கொண்டாடி வரும் தமிழக ரசிகர்களின் மீதிருக்கும் அன்பால் தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி சென்னை மண்ணில் நடைபெறும் என்று ஏற்கனவே தோனி தெரிவித்திருந்தார். அந்த நிலையில் 4 வருடங்கள் கழித்து தற்போது சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் 41 வயதை கடந்து விட்ட அவர் இத்தொடருடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி 14* (7) ரன்கள் விளாசிய அவர் லக்னோவுக்கு எதிரான 2வது போட்டியில் வெறும் 3 பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு இறுதியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி தம்முடன் பிறந்த ஃபினிஷிங் ஸ்டைல் எப்போதும் தம்மை விட்டு மறையாது என்று நிரூபித்தார்.

- Advertisement -

கோல்டன் ஹிஸ்டரி:
மேலும் அந்த போட்டியில் 5000 ரன்கள் கடந்த தோனி ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்கள் குவித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற மகத்தான சாதனையை படைத்தார். குறிப்பாக இதற்கு முன் விராட் கோலி, டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மட்டுமே தொட்ட 5000 ரன்கள் மைல்கல்லை மிடில் ஆர்டரில் விளையாடி தொட்ட முதல் வீரராக தோனி சாதனை படைத்துள்ளது அவருடைய திறமைக்கு மேலும் ஒரு சான்றாகும். அப்படி 41 வயதிலும் தனது அணிக்கு அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்து சாதனை படைத்து வரும் தோனி இந்திய ரசிகர்களால் கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக எப்போதும் ஜொலித்து வருகிறார் என்றே சொல்லலாம்.

குறிப்பாக 2019இல் ஓய்வு பெற்றாலும் இன்னும் அவருடைய மவுசு கொஞ்சமும் குறையாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற மகத்தானவர்கள் தங்களுக்கென்று தனித்துவமான வரலாற்றை கொண்டிருந்தாலும் இந்திய கிரிக்கெட்டில் தோனிக்கு தங்கத்தினாலான வரலாறு இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் வெளிப்படையாக பாராட்டியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் தனியாக 5000 ரன்கள் அடித்துள்ளார். தோனிக்கு எப்போதுமே கோல்டன் டெம்ப்ளேட் உள்ளது. இந்திய கிரிக்கெட்டிலும் உலக கிரிக்கெட்டிலும் அவருடைய வரலாறு தங்கத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. அவரை பற்றி நீங்களும் நானும் என்ன விரும்புகிறோமோ அதை சொல்லலாம். ஆனால் அவை அனைத்தும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எளிதாக சொல்ல வேண்டுமெனில் அவர் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை”

“அந்த போட்டியில் அவர் பேட்டிங் செய்த விதத்தை பாருங்கள். அவர் வெறும் 2 – 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். ஆனால் அதில் அவர் தம்மால் என்ன செய்ய முடியும் என்பதை காண்பித்தார். இந்திய கிரிக்கெட்டில் நாம் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் விராட் கோலியை கூட பார்த்துள்ளோம்”

இதையும் படிங்க:IPL 2023 : சீக்கிரமா டாப் ப்ளேயராக வரும் பொறுமை அவரிடம் இருக்கு – தமிழக வீரருக்கு சுனில் கவாஸ்கர் மெகா பாராட்டு

“ஆனால் தோனி களத்தில் தன்னை ஈடுபடுத்தும் விதத்திலும் அவரை பின்பற்றுபவர்கள் இருக்கும் விதத்திலும் முற்றிலும் மாறுபட்ட உணர்வு ஏற்படுகிறது. அது அபாரமானது” என்று கூறினார். இதை தொடர்ந்து ஏப்ரல் 8ஆம் தேதியன்று மும்பைக்கு எதிரான தன்னுடைய 3வது போட்டியில் சென்னையை தோனி வழி நடத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement