IPL 2023 : சீக்கிரமா டாப் ப்ளேயராக வரும் பொறுமை அவரிடம் இருக்கு – தமிழக வீரருக்கு சுனில் கவாஸ்கர் மெகா பாராட்டு

Gavaskar
- Advertisement -

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் தன்னுடைய முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னையை தோற்கடித்து 2வது போட்டியில் டெல்லியை வீழ்த்தி பங்கேற்ற 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதனால் இந்த வருடமும் 2வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வேலையை வெற்றிகரமாக துவங்கியுள்ள அந்த அணியில் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் பேட்டிங்கில் முக்கிய பங்காற்றி வருவது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Sai-Sudharsan

- Advertisement -

அதில் முதல் போட்டியில் 27 (21) ரன்கள் எடுத்த விஜய் சங்கர் 2வது போட்டியில் 29 (23) ரன்கள் எடுத்த நிலையில் முதல் போட்டியில் இம்பேக்ட் வீரராக உள்ளே வந்து முக்கியமான 22 ரன்கள் எடுத்து சென்னையை தோற்கடிக்க முக்கிய பங்காற்றிய சாய் சுதர்சன் டெல்லிக்கு எதிரான 2வது போட்டியில் காயமடைந்த கேன் வில்லியம்சனுக்கு பதிலாக நேரடியாக விளையாடும் வாய்ப்பு பெற்றார். அதில் சஹா 14, சுப்மன் கில் 14, கேப்டன் பாண்டியா 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 54/3 என தடுமாறிய குஜராத்தை 4வது விக்கெட்டுக்கு விஜய் சங்கருடன் இணைந்து 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 62* (48) ரன்கள் குவித்து க்ளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றி பெற வைத்தார்.

கவாஸ்கர் பாராட்டு:
உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த வருடம் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு விளையாடுவதற்காக கிடைத்த வாய்ப்புகளில் அசத்தி வெற்றிகளில் பங்காற்றிய அவர் தற்போது முதல் முறையாக ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் இளம் வீரராக இருக்கும் சாய் சுதர்சனிடம் வருங்காலங்களில் டாப் வீரராக வரும் அளவுக்கு திறமையும் பொறுமையும் இருப்பதாக முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Sai-Sudharsan

“சாய் சுதர்சனிடம் கடந்த போட்டியிலும் என்ன பார்த்தோம் என்றால் அவருடைய தன்னம்பிக்கையாகும். கடந்த ஐபிஎல் தொடரில் அவர் ஒரு சில போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த சில வாய்ப்புகளில் 30+ ரன்களும் அடித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் போட்டியிலும் பேட்டிங் செய்ய வந்த போது அவரிடம் தன்னம்பிக்கை இருந்தது. குறிப்பாக முதல் பந்திலிருந்தே தாம் நினைக்கும் இடத்தில் அவரால் அடிக்க முடிந்தது. கிரிக்கெட்டில் சில வீரர்கள் மட்டுமே அது போன்ற உயர்ந்த தரத்தில் கச்சிதமாக செயல்பட்டு கவனத்தை ஏற்படுத்துவார்கள்”

- Advertisement -

“அவர் சவாலை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன் என்பதை காட்டினார். குறிப்பாக அன்றிச் நோர்ட்ஜெ சவாலை எதிர்கொள்வதற்கு அவர் தயாராக இருந்தார். இருப்பினும் ஆரம்பத்தில் நோர்ட்ஜெவின் வேகத்தை தம்மால் அடித்து நொறுக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொண்டார். ஆனால் 2வது முறை பந்து வீச வந்த நோர்ட்ஜெ ஓவரில் அவர் 2 சிக்ஸர்கள் அடித்தார். அது தான் சாதுரியமான கிரிக்கெட்டாகும். குறிப்பாக அந்த சமயத்தில் போட்டியை சரி செய்ய வேண்டிய நிலைமைக்கு தகுந்தாற்போல் அவர் விளையாடினார்”

Gavaskar

“பொதுவாக டி20 கிரிக்கெட்டில் அனைவரும் மேலே தூக்கி அடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது அவர்கள் பெரிய அவளுக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை உங்களுக்கு சொல்லும். ஆனால் சாய் சுதர்சன் பெரிய சவாலை எதிர்கொள்வதற்கு முன்பாக நீங்கள் சில அடிகளை எடுத்து வைக்க வேண்டும் என காட்டினார்”

இதையும் படிங்க:RR vs PBKS : 10 வருடங்கள் கழித்து ராஜஸ்தான் எடுத்த தேவையற்ற முடிவு, நூலிழையில் போராட்ட வெற்றி பறிபோனது எப்படி?

“அந்த வகையில் அவரிடம் அனைத்து திறமைகளும் உள்ளன. நல்ல ஃபீல்டராக இருப்பதும் அவருடைய கூடுதல் பலமாகும். அதைவிட அவரிடம் இருக்கும் பொறுமை இதர வீரர்களிடமிருந்து அவரை தனித்துவமாக காட்டுவதாக நான் நம்புகிறேன். எனவே அவர் டாப் பிளேயராக விரைவில் வருவார்” என்று கூறினார்.

Advertisement