IND vs IRE : அயர்லாத்துக்கு எதிராக மட்டும் புலி, மற்ற அணிகளுக்கு எதிராக பூனையாக செயல்படும் நட்சத்திர வீரர் – காரணம் இதோ

- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக கம்பேக் கொடுத்துள்ள ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இளம் வீரர்களுடன் அசத்திய இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் மழைக்கு மத்தியில் வென்ற இந்தியா வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியிலும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

IND vs IRE Arshdeep Prasid krishna

- Advertisement -

அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ருதுராஜ் கைக்வாட் 58, சஞ்சு சாம்சன் 40, ரிங்கு சிங் 38, சிவம் துபே 22* என முக்கிய வீரர்களின் அதிரடியான ரன் குவிப்பால் 186 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய அயர்லாந்துக்கு ஆண்டி பால்பிரின் 72 ரன்கள் எடுத்ததை தவிர்த்து எஞ்சிய பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஏமாற்றத்தை கொடுத்ததால் 20 ஓவரில் 152/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்தி வெற்றியை உறுதி செய்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பும்ரா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

அயர்லாந்தில் புலி:
முன்னதாக இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 18, திலக் வர்மா 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 34/2 என சரிந்த இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சஞ்சு சாம்சன் அதிரடியாக 5 பவுண்டரி 1 சிக்சரை பறக்கவிட்டு 40 (26) ரன்கள் விளாசி தாக்கத்தை ஏற்படுத்தி சரிவை சரி செய்து ஆட்டமிழந்தார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சவாலான மைதானங்களில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் நிறைய விமர்சனங்களுக்கும் உள்ளானார்.

Sanju-Samson

கடந்த 2015இல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை 21 இன்னிங்ஸில் 374 ரன்களை 19.68 என்ற சுமாரான சராசரியிலேயே எடுத்து வருகிறார். குறிப்பாக ஏற்கனவே வாய்ப்பு கிடைக்காத இந்திய அணியில் கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்துவதில்லை என்று பெரும்பாலானவர்கள் பேசும் அளவுக்கு அவருடைய செயல்பாடுகளும் புள்ளிவிவரங்களும் இருக்கிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஆனால் கடந்த 2022 ஜூலையில் இதே அயர்லாந்துக்கு எதிராக நடந்த 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் 77 ரன்கள் குவித்து முதல் முறையாக அரை சதமடித்து தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தார். இருப்பினும் அதன் பின் கிடைத்த வாய்ப்புகளில் பெரும்பாலும் சுமாராக செயல்பட்ட அவர் மீண்டும் இந்த அயர்லாந்து தொடரில் முதல் போட்டியில் மழையால் வாய்ப்பு பெறாத நிலைமையில் இப்போட்டியில் 40 ரன்களை குவித்துள்ளார்.

அந்த வகையில் தம்முடைய கேரியரில் இதுவரை அயர்லாந்துக்கு எதிராக மட்டும் அவர் 118 ரன்களை 59 என்ற சிறப்பான சராசரியிலும் 171.01 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்து புலியை போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் இதர அணிகளுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் அவர் வெறும் 256 ரன்களை 15.05 என்ற மோசமான சராசரியிலும் 121.32 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்து பூனையை போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க:இவர் தான் உண்மையான ஆல் இன் ஆல் அழகுராஜா, யாருமே படைக்காத சரித்திரம் படைத்த ஹஸரங்கா – ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி

அதன் காரணமாக சவாலான அணிகளுக்கு எதிராக சஞ்சு சாம்சன் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக நிறைய ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் டாப் 4 இடத்திற்குள் விளையாடும் நிலையான வாய்ப்பைப் பெற்ற அவர் எஞ்சிய தொடர்களில் பெரும்பாலும் 5, 6 போன்ற இடங்களில் நிலையற்ற வாய்ப்புகளை பெற்றார். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் எப்போதுமே டாப் ஆர்டரில் விளையாடும் சஞ்சு சாம்சனுக்கு சர்வதேச அளவிலும் அதே வாய்ப்பை கொடுத்தால் இதே போல் அசத்துவார் என்று அவருடைய ரசிகர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement