- Advertisement -
ஐ.பி.எல்

அவர்கிட்ட ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு ஆனால் பினிஷிங் மோசம் – நட்சத்திர வீரரை விளாசும் ஆகாஷ் சோப்ரா

மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 3-வது வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை நகரில் பல திரில்லர் தருணங்களுடன் நடைபெற்று வரும் இந்த தொடரில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட தொடரில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அனைத்து அணிகளும் சண்டையிட்டு வருகின்றனர். இதில் 3-வது வாரத்தின் முடிவில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான புதிய அணியாக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஜொலிக்கிறது.

அதேபோல் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யப்படாத மும்பை கடைசி இடத்திலும் ஒரே ஒரு வெற்றியை பதிவு செய்த சென்னை 9-வது இடத்திலும் திண்டாட இதர அணிகள் அதற்கு மேற்பட்ட இடங்களை பிடிக்க போராடி வருகின்றன. இந்த தொடரில் 2-வது வாரத்தின் முடிவில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 3 வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

- Advertisement -

மீண்டெழுமா ராஜஸ்தான்:
ஆனால் அதன் பின் சற்று சரியத் தொடங்கிய அந்த அணி கடைசியாக குஜராத்துக்கு எதிராக நடந்த 5-வது லீக் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் 30-ஆவது லீக் போட்டியில் அதே நிலைமையில் வெற்றிக்காக போராடும் மற்றொரு அணியான கொல்கத்தாவை ராஜஸ்தான் எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ராஜஸ்தானால் டாப் 4 இடங்களுக்குள் முன்னேற முடியும் இல்லையேல் பின்னுக்குத் தள்ளப்பட்டு பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலைமை வரும். அதுபோன்ற நிலைமையை வராமல் இருக்க அந்த அணியின் கேப்டன் சஞ்சு சம்சன் பேட்டிலிருந்து ரன்கள் வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அந்த அணிக்கு இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் மற்றும் நடுவரிசையில் சிம்ரோன் ஹெட்மையர் ஆகியோரைத் தவிர யாருமே ரன்கள் அடிக்கவில்லை.

- Advertisement -

ஓப்பனிங் நல்லாருக்கு:
அதிலும் இதுவரை நடைபெற்ற இந்த போட்டிகளில் 272 ரன்கள் குவித்துள்ள ஜோஸ் பட்லர் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக தற்போது முதலிடத்தில் ஆரஞ்சு தொப்பியுடன் வலம் வருகிறார். இருப்பினும் எல்லா போட்டிகளிலும் அவரால் தனி ஒருவனாக ரன்களை குவிக்க முடியாது என்பதால் அவருக்கு உறுதுணையாக சஞ்சு சாம்சன் ரன்கள் அடித்தால் மட்டுமே ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக தொடங்கும் சஞ்சு சாம்சன் அதன்பின் மோசமாக செயல்படுகிறார் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் அபாரமாக தொடங்கும் அவர் அதன்பின் சரிந்து விடுகிறார். அதே கதை இந்த வருடமும் தொடருகிறது. அந்த வகையில் இம்முறை ஆரம்பத்தில் சிறப்பாக ஆரம்பித்த அவரின் ரன்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் “கேப்டன் நாக்” எனக்கூறுவது போல சிறப்பாக விளையாடி தனது அணியை உயர்த்த வேண்டிய நேரம் அவருக்கு வந்து விட்டது” என்று கூறினார்.

- Advertisement -

பினிஷிங் சரியில்ல:
இந்த வருடம் ஹைதெராபாத்க்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 27 பந்துகளில் 55 ரன்களை அதிரடியாக விளையாடினாலும் அதன் பின் பவுலர்கள் ஊதும் மகுடிக்கு பெட்டிப்பாம்பாக அடங்கி வரும் சஞ்சு சாம்சன் 30, 13, 11 என ஒவ்வொரு போட்டியிலும் ஆகாஷ் சோப்ரா கூறுவதுபோல இறங்கு வரிசையில் ரன்களை அடித்து வருவது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அவரின் பேட்டிங்கை போலவே தற்போது சரிவை சந்திக்க துவங்கியுள்ள ராஜஸ்தானுக்கு தாம் ஒரு கேப்டன் என்பதை உணர்ந்து தேவையான ரன்களை அடித்து தனது அணியை வெற்றிப் பாதைக்கு திரும்ப வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்இதையும் ளார்.

இத்துடன் அதே பட்லருக்கு கைகொடுக்க தவறும் மற்றொரு இளம் தொடக்க வீரர் தேவ்தூத் படிக்கல் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 41, 7, 37, 29, 0 என பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை. அதேபோல் மிடில் ஆர்டரில் தென் ஆப்பிரிக்க வீரர் ராசி வேன் டெர் டுஷனும் இதுவரை ஒரு போட்டியில் கூட தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரிய ரன்கள் அடிக்கவில்லை.

இதையும் படிங்க : என்ன ஒரு கண்மூடித்தனமான கொண்டாட்டம்! சதம் அடித்த பின் கேஎல் ராகுல் செய்யும் செயலை கண்டிக்கும் ஜாம்பவான்

எனவே இந்த 3 பேட்ஸ்மேன்களும் பொறுப்பை உணர்ந்து ரன்கள் அடித்தால் மட்டுமே பட்லர், ஹெட்மயர் ஆகியோரும் புத்துணர்ச்சியுடன் விளையாடி ரன்களை குவித்து ராஜஸ்தானை வெற்றிப் பாதையில் நடக்க வைக்க முடியும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Published by