என்ன ஒரு கண்மூடித்தனமான கொண்டாட்டம்! சதம் அடித்த பின் கேஎல் ராகுல் செய்யும் செயலை கண்டிக்கும் ஜாம்பவான்

KL Rahul Century
- Advertisement -

இந்திய அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் வீரராக கருதப்படும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கேஎல் ராகுல் ஏப்ரல் 18-ஆம் தேதி தனது 30-தாவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். ஆரம்ப காலகட்டங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் காலடி வைத்த அவர் அதன் உதவியால் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றார். தனது அறிமுக ஒருநாள் போட்டியிலேயே சதம் அடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தாலும் ஆரம்ப காலத்தில் ஐபிஎல் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களிலும் சொதப்பலாக செயல்பட்டார்.

அதற்காக கடும் விமர்சனங்களை சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தானே மெருகேற்றி கொண்டு இன்று 3 வகையான இந்திய அணியிலும் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார். அதிலும் கடந்த சில வருடங்களாக பேட்டிங்கில் ரன் மழை பொழிந்து வரும் அவர் விராட் கோலி போன்றவர்களுக்கு ஈடாக நிறைய சாதனைகளை படைத்து வருவதுடன் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். அதே காரணத்திற்காக சமீபத்தில் முதல் முறையாக இந்தியாவிற்கு கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ள அவர் இந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ அணிக்கு 17 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

காதை மூடும் சதம்:
கடந்த வருடங்களில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அவர் பெரிய அளவில் வெற்றிகளை குவிக்கவில்லை என்றாலும் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து லக்னோ அணியை புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் முன்னேற்றி வெற்றிநடை போட வைத்து வருகிறார். அதிலும் ஏப்ரல் 16-ஆம் தேதியன்று மும்பைக்கு எதிரான 6-வது லீக் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் அபாரமாக விளையாடிய அவர் 60 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட சதமடித்து 103* ரன்கள் விளாசி தனது அணியை வெற்றி பெறச் செய்தார்.

அது அவரது 100-வது ஐபிஎல் போட்டி என்பதால் ஐபிஎல் வரலாற்றிலேயே 100-வது போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். பொதுவாகவே சதம் அடிக்கும் போதெல்லாம் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் வித்தியாசமாக அதை கொண்டாடுவார்கள். அந்த வகையில் ஒவ்வொரு முறையும் சதமடிக்கும் கேஎல் ராகுல் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி விதமாக தனது கண்களை மூடிக்கொண்டு 2 கைகளால் பக்கவாட்டில் காதுகளை மூடி பதிலடி கொடுப்பது போன்ற வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்.

- Advertisement -

கவாஸ்கர் கேள்வி:
அதையே மும்பைக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததும் வழக்கமாக மீண்டும் கேஎல் ராகுல் செய்து தனது சதத்தை கொண்டாடினார். கிரிக்கெட்டில் இதுபோன்ற வித்தியாசமான செயலை முதல் முறையாக அறிமுகப்படுத்திய கேஎல் ராகுல் அதைத் தொடர்ந்து செய்து வருவதால் தற்போது ரசிகர்களுக்கும் அது பரிச்சயமாகி உள்ளது. இந்நிலையில் இது போன்ற ஒரு வித்தியாசமான கொண்டாட்டத்தில் என்ன அர்த்தம் உள்ளது என்று எனக்கு புரியவில்லை என முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதுபற்றி ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கிறார் என்றாலும் சதம் அடிக்கும் போது களத்தில் இருக்கும் ரசிகர்கள் பாராட்டும் கர கோசங்களை தானே அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களை நீங்கள் பவுண்டரி அல்லது சிக்ஸர்களை பறக்கவிடும்போது செய்து கொள்ளுங்கள். ஆனால் சதம் அடிக்கும்போது உங்களின் ஆர்வத்தையும் திறமையையும் மனதார பாராட்டும் ரசிகர்களின் கரகோஷங்களை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது கேஎல் ராகுல் இப்படி கொண்டாடுவதை பார்த்தால் அவரின் திறமையால் கிடைத்த சதத்தை மைதானத்திற்கு வந்து நேரில் கைதட்டி பாராட்டும் ரசிகர்களை அவமதிக்கும் செயலை போன்று இருப்பதாக கூறும் சுனில் கவாஸ்கர் அதற்கு பதிலாக உழைத்துச் சேர்க்கும் ஒவ்வொரு ரன்களின் இறுதியில் கிடைக்கும் சதத்திற்கு பரிசாக கிடைக்கும் ரசிகர்களின் கைதட்டல்களை காதில் கேட்டு மகிழ்ச்சி அடைய வேண்டும் எனக் அவரை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : வேற வழியே இல்ல, ஐபிஎல்’லை கேன்சல் செய்யுங்க – ஜோடியாக ட்ரெண்ட் செய்யும் சென்னை, மும்பை ரசிகர்கள்

மேலும் தொடர்ச்சியாக ரன்கள் அடிக்க முடியாமல் பார்மின்றி தவிக்கும்போது சதம் அடித்தால் இதுபோன்ற கொண்டாட்டத்தை செய்வதில் ஒரு அர்த்தம் உள்ளது எனக் கூறும் சுனில் கவாஸ்கர் இனிமேலாவது இதுபோன்ற கண்மூடித்தனமான அர்த்தமில்லாத கொண்டாட்டங்களை கேஎல் ராகுல் கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Advertisement