- Advertisement -
ஐ.பி.எல்

இந்தியாவுக்காக அசத்தியவர்.. கஷ்டமான வேலையை செய்யும் ஜுரேலை நம்புறோம்.. சஞ்சு சாம்சன் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற 44வது லீக் போட்டியில் லக்னோவை அதன் சொந்த மண்ணில் 7 விக்கெட் வித்யாசத்தில் ராஜஸ்தான் தோற்கடிப்பது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் 76, தீபக் ஹூடா 50 ரன்கள் எடுத்த உதவியுடன் 197 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 24, ஜோஸ் பட்லர் 34, கேப்டன் சஞ்சு சாம்சன் 71*, துருவ் ஜுரேல் 52* ரன்கள் அடித்து 19 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 9 போட்டிகளில் 8வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இப்போதே 90% உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிக்கு 7 பவுண்டரி 4 சிக்சருடன் 71* (33) ரன்கள் அடித்து ஃபினிஷிங் செய்த கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

ராஜஸ்தானின் அதிர்ஷ்டம்:
இந்நிலையில் இந்தியாவுக்காக சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அசத்திய துருவ் ஜுரேல் தங்களுடைய அணியில் கடினமான 5வது இடத்தில் பேட்டிங் செய்து வருவதாக சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். எனவே கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடும் அவரை முழுமையாக நம்புவதாக தெரிவிக்கும் சாம்சன் ராஜஸ்தானின் வெற்றி நடைக்கு அதிர்ஷ்டமும் கை கொடுத்து வருவதாக கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த பிட்ச்சில் புதிய பந்தில் கொஞ்சம் சவால் இருந்தது. ஆனால் அது பழையதானதும் பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருந்தது. அதை தெளிவாக பார்க்க நான் விக்கெட் கீப்பராக இருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். எங்களுடைய பவுலர்கள் அணியாக சேர்ந்து முக்கிய ஓவர்களை வீசினார்கள். களத்திற்கு வெளியே நாங்கள் நிறைய திட்டங்களை வகுத்துள்ளதால் எங்களுடைய பவுலர்களுக்கு ஒவ்வொரு பந்திலும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்”

- Advertisement -

“அதனால் ஆரம்பம் முதல் கடைசி வரை நன்றாக செயல்பட்டு அவர்கள் போட்டியை எங்கள் பக்கம் எடுத்து வருகின்றனர். துருவ் ஜுரேல் ஃபார்ம் தற்காலிகமானது. டி20 கிரிக்கெட்டில் 5வது இடத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமான வேலையாகும். அவரைப் போன்ற இளம் வீரரிடம் பொறுமை இருப்பதை டெஸ்ட் தொடரில் நாங்கள் பார்த்தோம். எனவே அவரை நாங்கள் நம்புகிறோம்”

இதையும் படிங்க: அந்த பையன் எங்களை வச்சி விளையாடிட்டான்.. தோல்விக்கு பிறகு டெல்லி வீரரை பாராட்டிய – ஹார்டிக் பாண்டியா

“நன்றாக செயல்படும் எங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்கிறது. நாங்கள் இதே செயல்முறையை கடைப்பிடிக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் தவறுகள் நடக்கலாம். எனவே எங்களுடைய செயல் முறையில் நாங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். வெற்றிகள் எங்கள் பக்கம் வருவதிலிருந்தே நாங்கள் சரியான வேலையை செய்கிறோம் என்பது தெளிவாக தெரிகிறது” என்று கூறினார்.

- Advertisement -