- Advertisement -
ஐ.பி.எல்

லக்னோ அணியின் உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம்.. முக்கிய முடிவை எடுக்கவுள்ள – கே.எல் ராகுல்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரானது பிளேஆப் சுற்று போட்டிகளை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த தொடரில் கொல்கத்தா, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை ஆகிய நான்கு அணிகள் தற்போது டாப் 4 இடங்களில் இருக்கும் வேளையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட சில அணிகள் தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அந்த வகையில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 57-வது லீக் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக கடைசி இரண்டு போட்டிகளாகவே லக்னோ அணி மோசமான தோல்வியை பெற்று வரும் வேளையில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்னர் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே கே.எல் ராகுலுடன் கோபமாக பேசியிருந்தார்.

இப்படி போட்டி முடிந்த பின்னர் கே.எல் ராகுலிடம் ஆவேசமாக பேசிய லக்னோ அணியின் உரிமையாளரின் செயல் பலரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. அதோடு கே.எல் ராகுலும் மைதானத்தில் அவரிடம் எதுவும் பேசாமல் அமைதி காத்திருந்த வேளையில் அவருடன் ஏற்பட்ட இந்த வாக்குவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அணியின் உரிமையாளர் பேசியதால் அதிருப்தி அடைந்த கே.எல் ராகுல் நேற்றைய போட்டி முடிந்த பின்னர் இன்னும் ஓய்வில் தான் இருக்கிறார் என்றும் அடுத்து அவர் பயிற்சிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் இந்த தொடரில் எஞ்சியுள்ள இரண்டு லீக் ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் நிச்சயம் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 241 ரன்ஸ்.. இந்த ஸ்ட்ரைக் ரேட் போதுமா? பஞ்சாப்பை விளாசிய கிங் கோலி.. ரோஹித், வார்னரை முந்தி 2 சாதனை

ஒருவேளை கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகினால் இந்த ஆண்டு லக்னோ அணியில் இருந்து நிச்சயம் வெளியேற்றப்படுவார் என்றும் தெரிகிறது. ஏற்கனவே டி20 உலக கோப்பை அணியில் வாய்ப்பை இழந்த கே.எல் ராகுல் தற்போது லக்னோ அணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -