- Advertisement -
ஐ.பி.எல்

708 ரன்ஸ்.. கிறிஸ் கெயில் தனித்துவ சாதனையை தூளாக்கிய கிங் கோலி.. ஆல் டைம் சாதனையும் சமன்

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 20204 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. குறிப்பாக முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய பெங்களூரு அணி முதல் 7 போட்டிகளில் தொடர்ந்து 6 தோல்விகளை பதிவு செய்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் ஒரு மாதம் கடைசி இடத்தில் இருந்த பெங்களூரு முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதன் பின் கொதித்தெழுந்த அந்த அணி அதற்கடுத்த 7 போட்டிகளில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்தது. குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெற்ற வாழ்வா – சாவா போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. அதனால் இம்முறை கண்டிப்பாக கோப்பையை வெல்வது உறுதி என்ற நம்பிக்கையுடன் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

கிங் கோலி சாதனைகள்:
பெங்களூரு அணியின் இந்த வெற்றிகளுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முக்கிய காரணமாக திகழ்கிறார் என்றே சொல்லலாம். ஏனெனில் இதுவரை நடைபெற்ற 14 போட்டிகளில் அவர் 708* ரன்களை 64.36 அற்புதமான சராசரியில் எடுத்துள்ளார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவர் ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.

முன்னதாக சென்னை அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் 47 (29) ரன்கள் அடித்த அவர் இந்த வருடம் மொத்தமாக 708* ரன்கள் அடித்துள்ளார். அத்துடன் ஏற்கனவே 2016 சீசனில் அவர் 973 ரன்கள் அடித்ததை யாராலும் மறக்க முடியாது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 2 வெவ்வேறு சீசனில் 700+ ரன்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் 2012, 2013 சீசன்களில் கிறிஸ் கெயிலும் முறையே 733, 708 ரன்கள் அடித்துள்ளார். தற்போது அந்த சாதனையை சமன் செய்துள்ள விராட் கோலி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை மொத்தம் 128 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனை உடைத்துள்ள விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: தோனியை குறை சொல்லாதீங்க.. உ.கோ ஜெயிச்சா கூட இப்படி செய்யக்கூடாது.. ஆர்சிபி’யை சாடிய ஹர்ஷா

இதற்கு முன் அதே சின்னசாமி மைதானத்தில் கிறிஸ் கெயில் 127 சிஸ்கர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அந்தப் பட்டியலில் 3வது இடத்தில் ஏபி டீ வில்லியர்ஸ் (118, சின்னசாமி) 4வது இடத்தில் ரோகித் சர்மா (97, வான்கடே) 5வது இடத்தில் கைரன் பொல்லார்ட் (85, வான்கடே) உள்ளனர். இதைத் தொடர்ந்து எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -